Thursday, April 25, 2013

வா.மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள்


வா.மணிகண்டனுக்கு சுஜாதா விருது கிடைத்துள்ளது. என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

அவர் சரளமாக சுவாரஸ்யமாக எழுதக் கூடியவர். சில வேளை இணையத்தில் அவர் வேண்டுமென்றே பரபரப்பான மேட்டரை எழுதுவார். சிலவேளை இலக்கில்லாமல் ஓட்டுவார். ஆனால் நம்மோடு நேரடியாக பேசும் தொனியில் சலிக்காமல் எழுதுவார். முக்கியமாக அவர் பொய் சொல்வதாக படாது.

Wednesday, April 24, 2013

இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்

இன்று தான்
அந்த நாள்
பிறந்தநாள்

எழுந்து பார்க்கிறாய்
சுற்றும் முற்றும்
வெளியே
ஜன்னல்களில்
மனிதர்களை மிருகங்கள் பூச்சிகளை
நீங்காப் புன்னகையுடன்
உலகை மீண்டும் ஒருமுறை
உற்சாகத்துடன் நம்பிக்கையுடன் ஏற்புடன் பார்க்கிறாய்
கண் திறந்ததும் வாழ்த்தத் தவறிய
என்னைக் கண்டிக்கிறாய்
முகம் கோணி அழ உத்தேசிக்கிறாய்
பின் விழ அரும்பிய கண்ணீரை
நிறுத்தி விட்டு
சிரிக்கிறாய்
இன்று நீ ஏமாற்றத்தை மறுப்பை கசப்பை
ஏற்றுக் கொள்ளப் போவதில்லை
ஒருக்காலும் இல்லை

Tuesday, April 23, 2013

சதயம்: குற்றமும் தூக்குத்தண்டனையும்
எம்.டி வாசுதேவன் நாயர் ஒரு முக்கியமான நாவலாசிரியருடன் வெற்றி பெற்ற திரைக்கதையாளரும் கூட. மலையாளத்தின் பொற்கால நடுநிலைப் படங்களில் சிறந்த ஒன்றான “சதயம்” அவரது திரைக்கதையில் உருவானது. 92இல் அவருக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது. மோகன் லாலின் நுட்பமான நடிப்பும் சிபி மலயிலின் கூர்மையான இயக்குமும் கூடுதல் பலங்கள். படம் தூக்குத்தண்டனையை பற்றியது.

மண்ணைப் போல இருப்பது“பூமியில்
பூக்கட்டி
பீடி சுற்றி
சுண்டல் வடை விற்று
சுக்குக்காப்பி விற்று
எப்படியும் பிழைக்கலாம்
மண் மாதிரி இருந்தால் போதும்”
- விக்கிரமாதித்யன்

Monday, April 22, 2013

எனக்கு கல்யாணம் - உனக்கு சாவு


எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். பெயரளவில் தான். ஒரு முறை நான் ஆஸ்பத்திரியில் சாகக் கிடக்கும் போது போன் பண்ணினான். நான் மயக்கத்தில் இருந்தேன். என் மனைவியிடம் பேசினான்.

Thursday, April 18, 2013

நீயா நானாவில் சிவகாமி


பெண் உயரதிகாரிகள் பற்றின நீயா நானாவில் சிவகாமி அருமையாக பேசினார். அவர் சொன்னதில் என்னைக் கவர்ந்தவை:

புத்தக விமர்சனக் கூட்டங்கள்: வேடிக்கை விரோதங்கள்

என்னுடைய நண்பர் ஒருவரை சுமார் பத்து வருடங்களுக்கு முன் ஒரு சினிமா நடிகரின் சார்பில் அவரது உதவியாளர் எழுதின கவிதைத் தொகுப்பு வெளியீட்டு கூப்பிட்டு பேசக் கேட்டார். நண்பர் அப்போது தீப்பிழம்பு போல் இருப்பாராம். அவர் சொன்னார்: “நான் பேசுகிறேன். ஆனால் புத்தகம் பற்றின என் உண்மைக் கருத்துக்களை தான் சொல்லுவேன்”.

இலங்கை எதிர்ப்பு மக்கள் போராட்டம்: முடிவில் இருந்து துவங்குவோம்(மூன்று வாரங்களுக்கு முன் எழுதினது)இலங்கைக்கு எதிரான மாணவர் போராட்டம் அதன் கீழ்ஸ்தாயை அடைந்து விக்கி விக்கி நிற்கிறது. அவர்களுக்கு எப்படி முடிப்பது எனத் தெரியவில்லை. தமிழகத்தில் விடுதலைப்புலி இயக்கத்தை துவங்குவது போன்ற இன்னும் பல புரட்சிகர முடிவுகளை எடுத்து போராட்டத்தை முன்னெடுக்க பார்க்கிறார்கள். சரியான கொள்கை பின்னணி இல்லாத இப்போராட்டம் அனுமார் வால் பற்றிக் கொண்டது போல இப்படித் தான் முடியும் என பலரும் எதிர்பார்த்தோம். இப்போது நாம் இந்த போராட்டத்தை எப்படி அணுகுவது, இதன் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

Tuesday, April 16, 2013

சிறந்த நட்பை எப்படி கண்டுபிடிப்பது?

நல்ல நண்பர்கள் எதேச்சையாக வாய்க்கிறார்கள்.  அவர்களை தேடிப் போக வேண்டியதில்லை. தேடிப் போய் வாஞ்சையாக பழகும் நபர்கள் சில சமயம் எதிரிகளாகியும் விடுகிறார்கள்.

Sunday, April 14, 2013

சென்னையும் மீனும்என்னதான் சிக்கன் மட்டன் முருங்கைக்காய் வெண்டைக்காய் சாப்பிட்டாலும் திருப்தி, மனநிறைவு, வயிற்று சுகம் வருவது நல்ல மீன்சாப்பாட்டுக்கு பிறகு தான். சாப்பிட்ட பிறகு வாயில் கமழும், விரல்களில் ஒட்டிக் கொண்டிருக்கும், உடல் வீச்சத்தில் கலந்து விடுகிற மீன் வாசனையை ரசிப்பேன். அதே போல் உள்நக்கில் ஒட்டிக் கொள்ளும் லேசான கசப்பு.

ஒரு கிறித்துவர் படம் பார்க்கிறார்
குமரி மாவட்ட கிறுத்துவர்கள் பொதுவாக திரையரங்குக்கு குடும்பமாக போக மாட்டார்கள். வாலிபர்கள் ஒளிந்து பதுங்கி ஏ படம் பார்ப்பது போல் சினிமாவுக்கு போவார்கள். வீட்டில் டி.வியில் அல்லது திருட்டு டி.வி.டியில் படம் பார்ப்பார்கள்.

Thursday, April 11, 2013

எழுத்தாளனுக்கு புகழ் தேவையா?

டி.வி விவாதங்களில் அவ்வப்போதும், எப்போதும் தலைகாட்டும் நண்பர்களைத் தெரியும். நானும் சிலமுறை தோன்றியிருக்கிறேன். அப்போது எனக்கு இரண்டு கேள்விகள் தோன்றும்.
1. இங்கு நான் ஏன் இருக்க வேண்டும்?
2. எனக்கு என்ன பயன்?

Monday, April 8, 2013

குடிக்கலாமா?
டி.வி விவாதங்களில் மதுப்பழக்கத்தை கடுமையாக கண்டித்து ஆவேசப்படுபவர்களைப் பார்க்கும் போது ஒரு சின்ன சந்தேகம் தோன்றும்: இவர்கள் எல்லாம் விவாதம் முடித்து கிளம்பும் போது குடிக்க மாட்டார்களா? அப்படி குடிப்பழக்கம் கொண்டவர்கள் என்றால் மதுவை கண்டிக்க உரிமை உண்டா?

Sunday, April 7, 2013

மலையாளிகள்: எங்கும் ஒட்டாத இனம்சமீபமாக சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் கேரள மாணவர்களின் கேங் சண்டையின் விளைவாக தீபக் என்று ஒரு மாணவன் இறந்து போனான். சேலத்தில் மட்டுமல்ல அருகாமை மாவட்ட கல்லூரிகளில் உள்ள மலையாளி இளைஞர்கள் கூட இந்த கேங்களில் சேர்ந்து கொள்கிறார்களாம். இதற்கு உறுப்பினர் கட்டணம் எல்லாம் உண்டு. தமிழக மாணவர்களே பண்ணாத ஒரு காரியத்தை வெளிமாநில மக்கள் எப்படி செய்ய துணிகிறார்கள் என நாம் சிந்திக்க வேண்டும். இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

Thursday, April 4, 2013

துரோகமும் தமிழ் சினிமாவும்


(ஏப்ரல் மாத அந்திமழை சினிமா சிறப்பிதழில் வெளிவந்துள்ள கட்டுரை)எல்லா சினிமாக்களையும் போல தமிழ் சினிமாவில் துரோகத்தின் அடிப்படையில் நிறைய படங்கள் வந்துள்ளன. ஆனால் அரிதாகவே ஆழமாக துரோகம் எனும் பிரச்சனையை சித்தரிக்கவோ அலசவோ செய்திருக்கிறோம்.
இங்கு எனக்குப் பிடித்த தமிழ் துரோகப் படங்களில் சில.
“ரெட்டைவால் குருவி”

1987இல் வெளிவந்த பாலுமகேந்திராவின் இந்த பிரபலப் படம் தாம்பத்திய துரோகம் பற்றினது.

Wednesday, April 3, 2013

பாலசந்திரனும் புலிகளின் குழந்தைப் போராளிகளும்


புலிகள் குழந்தைப் போராளிகளை பயன்படுத்தியது குறித்து ஒரு கட்டுரை இன்றைய இந்துவில் வந்துள்ளது. சிங்ளப்படையினர் பாலசந்திரனை கொன்றதை கண்டிக்கும் போது மேற்சொன்ன புலிகளின் தவறையும் நினைத்துக் கொள்வோம் என்கிறார் ஆசிரியர்.