Saturday, March 30, 2013

The Inscrutable Americans

நகைச்சுவையில் எழுத்தில் ஆளை மட்டம் தட்டும் மட்டமான ரகத்தில் உயர்வான முறையில் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். தமிழில் சாருவை சுட்டலாம். அனுராக் மாத்தூரின் நகைச்சுவை இப்படிப் பட்டது.

சமூகம் எனும் மலைப்பாம்பு
எனக்குக் கூட சிலவேளை ஒரு தீவிரவாதியாகவோ சைக்கோ கொலைகாரனாகவோ ஆனால் என்ன எனத் தோன்றும். அப்போதெல்லாம் இன்னொரு எண்ணமும் வரும்: இந்த சமூக விரோதிகள் உண்மையில் தீவிர சமூக அக்கறை கொண்டவர்கள் என்று. என்ன தம் அக்கறையை எதிர்மறையாக காண்பிக்கிறார்கள். அழிப்பதன் மூலம் நானும் உங்களில் ஒரு பகுதி என பொது சமூகத்திடம் சொல்ல தலைப்படுகிறார்கள். அப்படிப் பார்த்தால், சமூக விரோதிகள் நீட்சேயியவாதிகளாக இருக்க முடியாது. அவர்களுக்கு சமூகத்திடம் மரியாதையும் தொடர்புறுத்தும் விருப்பமும் உண்டு. சமூகம் தமக்கு இணை என நம்புகிறார்கள். இல்லை என்றால் இவ்வளவு பிரயத்தனித்து சமூகத்தை திருத்தவோ அல்லது பழிவாங்கவோ முயல்கிறார்கள்?

Friday, March 29, 2013

ராஜூமுருகனின் “வட்டியும் முதலும்”: சுரண்டல் எழுத்து

ராஜூ முருகனின் “வட்டியும் முதலும்” படித்து விட்டு படத்தயாரிப்பாளர்கள் சாக்கு மூட்டை நிறைய பணத்துடன் அவரது வரவுக்காக காத்திருப்பதாக ஒரு இயக்குநர் சன் நியூஸின் “திரைப்படமும் இலக்கியமும்” என்கிற விவாதத்தின் போது குறிப்பிட்டார். உடனே அதன் ஒருங்கிணைப்பாளர் குறுக்கிட்டு அந்த பத்தியை அவர் ஏதாவது சிறுபத்திரிகையில் எழுதியிருந்தால் கவனித்திருப்பார்களா என்றார்.

Friday, March 22, 2013

கொடுத்து வைத்த வாழ்க்கை!


என் கூடப்படித்த நண்பன் ஒருவனின் அப்பா சில மாதங்களுக்கு முன் காலமானார். அவன் படுமக்கு. அவர் தான் பெருந்தொகை லஞ்சம் கொடுத்து பையனுக்கு அரசு வேலை வாங்கித் தந்தார். ஆனால் அப்பாவுக்கு மகன் மீது அப்படி ஒரு பெருமை. சதா புகழ்ந்து கொண்டே இருப்பார். இன்னொரு பக்கம் பல புத்திசாலியான திறமைசாலியான மகன்களை மட்டம் தட்டும் தகப்பன்களை பார்த்திருக்கிறேன். இந்த முரண்பாட்டுக்கு ஏதோ ஒரு பொது நியதி இருக்கிறது.

Monday, March 18, 2013

குருதி சொரியும் ஒரு கையின் சுவை

ஒரு நீண்ட சுயமைதுனத்தின் முடிவு
ஒரு நீண்ட வெந்நீர் மழையில்
படிகத்துளிகளிடையே
ஆயிரமாயிரம் சிதறல்களாய் நகர்ந்து
ஒரு அரையிருள் கடற்கரையை வந்தடைவதைப்
போன்று உள்ளது.

Wednesday, March 13, 2013

பித்தி மொஹந்தி – நம் காலத்தின் நாயகன்

ஜான் டேவிட் ஜாமீனில் இருந்த போது வேளச்சேரி பி.பி.ஓ ஒன்றில் போலி சான்றிதழ் அளித்து போலி பெயரில் வேலை செய்ததை அறிவோம். இப்போது ஜெர்மன் மாணவியை கற்பழித்த பித்தி மொஹந்தி, ஏழு வருடம் தலைமறையாய் இருந்ததாய் சொல்லப்படுகிற காலத்தில் இந்திய ஸ்டேட் பேங்கில் துணை மேலாளர் பதவியில் வேலை பார்த்து இருந்திருக்கிறார். அவரும் போலி பெயர், போலி சான்றிதழ் தான் பயன்படுத்தி இருக்கிறார். இதை விட முக்கியமாய், அவர் 2006இல் ஐ.ஏ.எஸ் பரீட்சையின் முதல் கட்டத்தில் தேர்வாகி விட்டதாகவும் தெரியவருகிறது. அவர் முழுப்பரீட்சையிலும் வென்று இதே போலி பெயரில் ஒரு ஆட்சியராக வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. உண்மையில் அப்படி நடந்திருந்தால் நமது அரசு அமைப்புகளில் உள்ள ஊழல்கள் இன்னும் பிரம்மாண்டமான முறையில் வெளிப்பட்டிருக்கும்.

Sunday, March 10, 2013

இந்து, இஸ்லாம், கிறுத்துவம்: குட்டையும் மட்டையும்என்னுடைய ஒரு நண்பருடன் இந்துப்பத்திரிகை பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் தனக்கு சமீபமாக அப்பத்திரிகை பிடிக்காமல் போய் விட்டது என்றார். அது இந்து மதத்தை அவமானிக்கும் வகையில் செயல்படுவதாக காரணம் குறிப்பிட்டார்.

Saturday, March 9, 2013

இது தப்பா?


இந்த மாத உயிர்மையில் வந்த எனது “இந்து, இஸ்லாம், கிறித்துவம்: குட்டையும் மட்டையும்” என்ற கட்டுரையை ஒட்டி பாலசுப்பிரமணியம் என்பவர் என்னை “மதங்களை வெறுப்பவன்” திட்டி கடிதம் எழுதியிருக்கிறார். அது குறித்து மூன்று விசயங்களை தெளிவுபடுத்த வேண்டும்.


ஒன்று, வெறுப்பு என்பது உக்கிரமான ஈடுபாட்டில் இருந்து வருவது. எனக்கு மதம் எனும் அமைப்பின் மீது அத்தகைய ஈடுபாடு இல்லை. ஆக காழ்ப்பும் இல்லை.

இரண்டு, மதம் இன்று நம்மை நவீன வாழ்வின் உரிமைகள், வாய்ப்புகள், முக்கியமாய் சுதந்திரம் ஆகியவற்றை அடைய விடாமல் தடுப்பதாய் நம்புகிறேன். ஒருவன் சமகாலத்திலும் மதத்திலும் ஒரேநேரத்தில் இருக்கவே முடியாது. ஆக, சிறுபான்மையினர், பெண்கள், ஊனமுற்றோர், ஜனநாயகவாதிகள் அனைவருக்கும் பெரும் தடைச்சுவர் மதம். நாம் மதத்தை எதிர்ப்பது கடவுளை பிடிக்காததனால் அல்ல.

மூன்று, மதம் நம்மை தர்க்கரீதியாய் சுயசார்போடு யோசிக்க விடாமல் எளிதில் தன்னல அமைப்புகள் அல்லது நிறுவனங்களுக்கு அடிமையாக்குகிறது. மதத்துக்காக கொல்லப்பட்ட கொல்லுகிற மக்களின் எண்ணிக்கை முடிவற்றது. இன்றும் இதை எழுதுகையிலும் யாரோ ஒருவர் மதத்துக்காக கொல்லப்படுகிறார், துப்பாக்கி ஏந்துகிறார். போர், அதிகாரம், வன்முறை இவற்றுக்கும் மதத்துக்கும் வலுவான தொடர்பு உள்ளது. அரசியல்ரீதியாய் மதம் ஒரு நவீன மனிதனுக்கு எதிரானது.

ஒரு மனிதன் தான் வாழ்கிற காலத்தில் வாழ வேண்டும். அதனுடன் எதிர்வினை செய்ய வேண்டும். அதற்கு மனவலு இல்லாதவர்கள் தான் மதத்தில் போய் ஒளிகிறார்கள்.

நான் நாத்திகவாதி அல்ல. என்னுடைய நோக்கம் கடவுள் இருப்பை மறுப்பது அல்ல. மதவாதிகள் நாகரிகமற்றவர்கள் என ஆத்மார்த்தமாக நம்புகிறேன். அவர்களை நவீன பண்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறேன். சுதந்திரமாக யோசிக்க கேட்கிறேன். எழுத்தாளனின் பணி அது. அது தப்பா?

Friday, March 8, 2013

ஸ்டண்ட் கலைஞன் அல்ல - மதிமலர்
முஷ்டியை முறுக்கி நெஞ்சு தசைகள் அனைத்தும் இறுகி முகம் கல்லாக மாறி
கோபத்தின் ஆவி பறக்க, ஒரே அடியில் ஆளைக் காலி செய்யும் புரூஸ் லீ
என்ற நடிகனின் திரைப்படங்களை திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே
இருக்கிறோம். அவனைப் பற்றிய பன்முக பிம்பத்தை இந்த நூலில் உருவாக்கி
இருக்கிறார் ஆர். அபிலாஷ். சின்ன வயதில் ஷாங்காயின் நெருக்கமான தெருக்களில்
சதா சண்டையிட்டுத் திரிந்த நோஞ்சான் இளைஞனான புரூஸ் லீ, குங்-பூ கற்று பெரும்
சண்டைக் கலைஞனாக உருப்பெறுவது இந்நூலின் பக்கங்களில் அபிலாஷுக்கே உரிய
மொழியில் கட்டமைக்கப்படுகிறது. புரூஸ்லீக்குப் பெயர் வைத்தது அவர் பிறந்த
மருத்துவமனையின் மருத்துவர் என்பதில் ஆரம்பித்து சமீபத்தில் தமிழில் புரூஸ் லீக்கு
மிஷ்கின் செலுத்தும் மரியாதை வரைக்கும் இந்நூலில் கொண்டு வந்துள்ளார். நான்
அமெரிக்காவில் அதிகம் சம்பாதிக்கும் ஆசிய நடிகன் ஆவேன். பத்து ஆண்டில் ஒரு
கோடி டாலர் பணம் சம்பாதிப்பேன் என்று தான் படுத்த படுக்கையாகக் கிடந்தபோது
எழுதி வைத்து, அதன் படியே வென்றவர் புரூஸ் லீ. அவரிடம் ஆயிரக்கணக்கணக்கான
புத்தகங்கள் இருந்தன. வாஷிங்டன் பல்கலையில் அவர் தத்துவம் பயின்றவர்- ஆகிய
புரூஸ் லீ பற்றிய பெரிதும் அறியப்படாத தகவல்களும் அவரது காதல், ஜென்
ஞானியைப் போன்ற ஒட்டாத நடவடிக்கைகள், அவர் குங் பூ ஆசானாக அமெரிக்காவில்
புகழ் பெற்ற கதைகள், அவர் பங்குகொண்ட சண்டைகள், சவால்கள்- படிக்கப் படிக்க
புரூஸ்லீ பெரும் காவிய நாயகனாக நம்முன் எழுந்து நிற்கிறார். எல்லாவிதமான
முரண்களும் கொண்ட ஒரு சாதாரண மனிதனாக இருந்த அவர் அவற்றுடனே
அவற்றைக் கடந்து சென்றிருக்கிறார் என்பதே இந்நூல் விளக்கும் செய்தி.

நன்றி: அந்திமழை மார்ச் 2013

Sunday, March 3, 2013

கால்கள் - ஒரு பயணம் - சர்வோத்தமன் விமர்சனம்

 
 கால்கள் நாவல் , கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மது அவளது நண்பர்களை போல அவளும் தனதேயான தனி அடையாளங்கள் கொண்ட பெண்ணாக மாறும் சித்திரத்தை அளிக்கிறது.போலியோவால் பாதிக்கப்பட்ட மது ஆட்வோவில்  கல்லூரிக்கு செல்கிறாள்.பின்னர் ஒரு நாள் வாழ்விலே முதல்முறையாக பேருந்தில் நண்பன் கார்த்திக்குடன் செல்கிறாள்.பயணத்தின் ஊடாக தான் இதுவரை பேருந்தில் பயணம் செய்யாததால் எதையும் இழந்துவிடவில்லை என்பதை உணர்கிறாள்.