Thursday, February 28, 2013

“கலங்கிய நதி” – லட்சியவாத மூட்டம்
பி.ஏ.கிருஷ்ணனின் “கலங்கிய நதி” ஒரு சரளமான சுவாரஸ்யமான நாவல். அவ்வளவு தான், அதற்கு மேல் இல்லை என்பது தான் ஏமாற்றமானது. பி.ஏ. கிருஷ்ணனின் “புலிநகக் கொன்றையில்” ஒரு வம்சாவளியில் வரும் சில தலைமுறை மனிதர்கள் தொடர்ந்து ஒரு காலச்சுழலில் மாட்டிக் கொள்கிற தத்துவார்த்தமான சித்திரம் உள்ளது. லட்சியவாதமும், மரணம் நோக்கிய உன்மத்த ஈர்ப்பும், அன்பும், காதலும் மனிதர்களை எப்படி ஒரு தூண்டிலுக்குள் கோர்த்து இழுக்கிறது, காலத்தின் விளிம்பில் மனிதன் எவ்வாறு திக்கற்று நிற்கிறான் என்பதைப் பற்றி செறிவாக பேசுகிறது.

Monday, February 18, 2013

மரணத்தின் வாசலில்இதே காலகட்டத்தில் புரூஸ் லீ தான் விரைவில் இறந்து விடுவோம் என்று நம்பவும் துவங்கினார். 1973 மே மாதம் தன் அம்மாவை சந்தித்த போது தன் மரண பயத்தை வெளிப்படுத்தினார். “அம்மா உன் எதிர்காலம் பற்றி கவலைப்படாதே. நான் இல்லாமல் போனாலும் கூட உனக்கு இனி பணக் கஷ்டமே இருக்காது” என்று உருக்கமாக கூறினார். Enter the Dragonஇல் ஹான் பாத்திரத்தில் வில்லனாக நடித்த ஷி கியன் ஒரு மூத்த நடிகர். புரூஸ் லீயை சிறு வயதில் இருந்தே நன்கு அறிந்தவர். லீ படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்தித்து “மாமா நான் விரைவில் இறந்து போய் விடுவேன்” என்று கூறினார். அதற்கு கியன் ”உனக்கு இப்போது நிறைய ஓய்வு தேவை” என்று மட்டுமே பதில் கூறினார். இதன் பொருள் புரூஸ் லீக்கு தன் வரப் போகும் மரணம் பற்றின் உள்ளுணர்வு இருந்ததென்றா? இல்லை. மரணம் அவ்வளவு எளிதில் ஊகிக்க முடிகிற ஒன்று அல்ல. மேலும் யாரும் உள்ளூர சாக விரும்புவதும் இல்லை. ஆனால் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தங்களது வலி மற்றும் கசப்பு காரணமாய் மரணத்தை பற்றி தொடர்ந்து சிந்தித்தபடி இருப்பார்கள். சம்மந்தம் இல்லாதவர்களிடம் கூட வெளிப்படையாக மரணத்தைப் பற்றி குறிப்பிடுவார்கள். ஒருவித அச்சம் தான் இதற்கு காரணம். மரணம் பற்றின அவரது பிரஸ்தாபங்கள் அவர் எவ்வளவு தீவிரமான நெருக்கடியில் இருந்தார் என்பதைத் தான் காட்டுகிறது.

(புரூஸ் லீ சண்டையிடாத சண்டை வீரன் நூலில் இருந்து)

Saturday, February 16, 2013

சச்சின், பிளட்சர் மற்றும் ஒரு பெண் மட்டையாளர் -

சச்சினின் சலனமற்ற ஓய்வு
சச்சினின் ஒருநாள் ஆட்ட வாழ்வு அதிகார பூர்வமாய் ஒரு முடிவுக்கு வருகிறது. அவர் கடந்த சில வருடங்களாய் ஒருநாள் வடிவை பொதுவாக தவிர்த்து வந்தார். அதனால் தற்போதைய ஓய்வு அறிவிப்பு ஒரு சடங்கு மட்டும் தான். அதன் ஒரே முக்கியத்துவம் அவர் தனது நூறாவது சதத்தை அடைவதற்காக செய்தது போல் தற்போது தன் ஆட்டநிலையை மேம்படுத்த ஒருநாள் வடிவை தற்காலிகமாய் பயன்படுத்தப் போவதில்லை என்பது. இந்திய அணியின் எதிர்காலத்துக்கு அது நல்லதல்ல என அவர் அறிவார். ஆக இது ஒரு நல்ல முடிவு.

விஷ்வரூபம்: யாரை யார் பழிவாங்குகிறார்கள்?

இஸ்லாமிய எதிர்ப்பு, விஷ்வரூபத் தடை ஆகிய பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டது கமலஹாசனாக தோன்றினாலும் உண்மை அதுவல்ல. கமலுக்கும் ஜெயலலிதா அரசுக்கும் இடையிலான ஈகோ மோதலில் இஸ்லாமிய எதிர்ப்பு ஒரு கொல்லை பொம்மை போல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Friday, February 8, 2013

“ஒரு வெயில் நேரம்”: ஒரு வாசிக்கத்தக்க தொகுப்பு

கதைகள் படுவேகமாய் சரளமாய் போகின்றன. இதை கொஞ்சம் அழுத்தியே சொல்ல வேண்டும். தற்போது தமிழில் தீவிர கதை எழுதுபவர்களுக்கு, அதிலும் வெகுவாய் கவனிக்கப்படுபவர்களில் பலருக்கும், ஒரு கதையை பிசிறின்றி சொல்லத் தெரியவில்லை. வாக்கியங்களை பிதுக்கி ஜெலேபி போல போட்டால் கவித்துவமாகி விடும் என நினைக்கிறார்கள்.

இந்திய டெஸ்டு அணியின் அவலமும் எதிர்காலமும்: கசப்பான எதார்த்தங்கள்

இந்திய டெஸ்டு கிரிக்கெட் ஏன் இப்படி அதலபாதாளத்துக்கு போய் அங்கேயே கொடி நாட்டி இது தான் உலகின் மிக உயரமான சிகரத்தின் உச்சி என பெருமூச்சு விட்டு கற்பனைப் புன்னகை பூக்கிறார்க்ள் என பலரும் கேட்கிறார்கள். அதாவது ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்கிறார்கள். நாமும் கேட்கலாம். எனக்கு சில காரணங்கள் தோன்றுகின்றன.

Friday, February 1, 2013

வசவதா எனும் இளைய கங்குலியும் சச்சின் எனும் குட்டிப் பையனும்

26-01-13அன்று ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் முதல் நாள். சௌராஷ்டிரா vs மும்பை. மும்பை வழக்கம் போது இறுதிப்போட்டி எதிராளியை நாலாய் மடித்து வாயில் போட்டுக் கொண்டது. சௌராஷ்டிரா முதலில் மட்டையாடி நூற்று நாற்பத்து எட்டுக்கு ஆட்டமிழந்தது. இந்த நிலச்சரிவில் ஒரே ஒருவர் தனியாக நின்று சமநிலையுடன் ஆடினார். அவரது ஆட்டம் நிறைய கங்குலியையும் கொஞ்சம் முன்னாள் வங்கதேச அணித்தலைவர் ஹசனையும் கலந்தது போல இருந்தது. அவர் பெயர் வசவதா.