புதுமைப்பித்தனின் அப்பாபுதுமைப்பித்தன் (தனது பூர்வீக) நிலத்தை விற்று காசாக்கிய போது அவரது சித்தப்பா சுப்பிரமணியபிள்ளை ஒரு யோசனை சொன்னார். வீணாக பணத்தை செலவு செய்து விடாமல் ஒரு ஜீப் கார் வாங்கி வாடகைக்கு விட சொன்னார். அப்போது யுத்தம் முடிகிற அல்லது முடிந்துவிட்ட பருவம். சரசமான விலைக்கு உறுதியான ஜீப் கார்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. எனவே அப்படி ஒன்று வாங்கினால் ஏதாவது பிரயோஜனகரமாய் இருக்கக் கூடும் என்பது அவர் எண்ணம். ஆனால் அதற்கு புதுமைப்பித்தன் சொன்ன பதில் என்ன தெரியுமா?

“”ஜீப் வாங்குவதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை வாங்கியவுடனேயே அதை என் அப்பா மேலே தான் விடுவேன். சம்மதமா?”
- தொ.மு.சி. ரகுநாதன், ப.50, ”புதுமைப்பித்தன் வரலாறு”

Comments