Wednesday, May 23, 2012

வழக்கு எண் 18/9 – காதலின் இரு முகங்கள்



தமிழில் காதல் ஒரு தெய்வீக காரியமாக பூஜிக்கப்பட்ட காலம் ஒன்றிருந்தது. அநேகமான படங்களில் காதலர்கள் இறந்து காதலை வாழ வைப்பார்கள். 90களுக்கு பிறகு இந்நிலைமை மெல்ல மாறியது. பொருளாதார ஸ்திரத்தன்மை பெற்ற ஒரு தலைமுறை காதலை ஆண்-பெண் சமத்துவம் கோரும் ஒரு பரஸ்தர அன்பு பாராட்டலாக காணத் துவங்கியது.

Friday, May 18, 2012

சைனாமேன்: இலங்கை கிரிக்கெட் பற்றின முதல் நாவல்



நம்மூரில் எழுத்தாளனாய் இருப்பதன் வறட்டுத்தன்மை (மிகச்சில விதிவிலக்குகள் தவிர்த்து) வயது மூக்க மூக்க தான் அங்கீகாரம் உருவாகும் என்பது. ஒரு பத்துவருடம் எழுதினால் தான் மூளையில் எழுத்துக்கலைக்கான நரம்பணுக்கள் முழுக்க உருவாகும் என்று ஒரு ஆய்வு கூட சொல்லுகிறது. எப்படியும் ஓய்வுபெற்றவர்கள் நடைபழகுவது பொழுதுபோக்கவா உடற்பயிற்சிக்கா என்பது போன்ற சிறுகுழப்பம் பல உள்ளூர் எழுத்தாளர்களுக்குள் தமது எழுத்துவாழ்க்கை பற்றிய சுயஐயமாக உள்ளது.

Tuesday, May 15, 2012

ஒரு குப்பைத் தொட்டிக்குள்





ஒரு காலையை
சகஎழுத்தாளனை தூஷித்துக் கொண்டு
துவங்குகிறேன்
என் நாய்க் குட்டி
தன் பீப்பீ பொம்மையை
தொடர்ந்து கடித்து கதற வைக்கிறது

இந்தியாவில் தத்தெடுப்பு: சாதியமும் சந்தைமனநிலையும்




முறைகேடுகளின் கதை

உலகிலேயே அதிகபட்சம் குழந்தைகளை வெளிநாடுகளில் இருந்து தத்தெடுக்கும் நாடு அமெரிக்கா. அவர்கள் குழந்தைகளுக்காக அதிகம் நாடுவது சீனாவை. அதற்கடுத்து அதிகபட்சமான குழந்தைகள் சுரங்கமாக விளங்கும் மூன்றாம் உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1980களில் ஒரு குழந்தை வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் வழியில் இறந்து போக இந்தியா ஒரு குழந்தைகள் ஏற்றுமதி சந்தையாக மாறி வருவது பற்றின ஒரு பெரும் சர்ச்சை எழுந்தது.

Monday, May 7, 2012

டாஸ்மாக் மதுபானக்கடை: தமிழ் சினிமா பாடல்களின் தேக்கமும் புதுப்பாய்ச்சலும்




கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமா பாடல்களில் உள்ள குறிப்பிடத்தக்க விசயம் அதில் குறிப்பிடத்தக்கதாய் எதுவுமோ இல்லை என்பது. வைரமுத்து, மு.மேத்தா, நா.காமராசன் ஆகியோருக்கு பிறகு ஆளுமை கொண்ட பாடலாசிரியர்கள் இங்கு உருவாகவில்லை.

Tuesday, May 1, 2012

மதிப்பெண்ணும் வேலையும்


பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் ஒருநாள் அவசரமாக நண்பர் முஸ்தபாவின் புத்தகக்கடை அரட்டையில் இருந்து அவசரமாக துண்டித்து “படிக்கணும் என்று கிளம்ப முற்பட்ட போது கவிஞர் நட.சிவகுமார் “என்ன படிக்கணும்? என்றார். இளங்கலை பாடத்திட்டத்தில் உள்ள ஒரு நூலின் பெயரை சொன்னேன்.