Tuesday, April 24, 2012

பிடிக்காத ஒருவர் பக்கத்தில் அமர்ந்திருப்பது




பிடிக்காத ஒருவர்
பக்கத்தில்
அமர்ந்திருப்பது
ஒரு சுகந்த மலரை
பறிக்க
மனம் தடுமாறுவதைப் போல.

Friday, April 20, 2012

திருமணநாள் பரிசுகள்




திருமணநாள் பரிசுகள்
குழந்தைத்தனத்தால் புத்தொளிர்கின்றன.
வருடங்கள் முன் பின் சென்று
தூசு படிந்து
நிறம் மங்கி வரும்
ஒரு குழந்தையின் பாதுகாக்கப்பட்ட
விளையாட்டுப் பொருட்களைப் போல்

Tuesday, April 17, 2012

இனிய சேதியில் ஆரம்பமாகும் நாள்



ஒரு இனிய செய்தியில் ஆரம்பமாகும் நாள்
அப்போதில்
இருந்து தான்
துவங்குகிறது

Thursday, April 12, 2012

சச்சினும் திராவிடும் – ஒரே படகில் மேதையும் நடைமுறைவாதியும்


மேதைமையின் சிலுவை:

இரு கசப்பான சுற்றுப்பயணங்களுக்குப் பிறகு இரு பெரும் கிரிக்கெட் ஆளுமைகள் தம் மீதுள்ள சுமையை இறக்கி இருக்கிறார்கள். சச்சின் தனது நூறாவது சதத்தை ஆசியக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக அடித்து. திராவிட் எதிர்பாராத படி வழக்கமான நிதானத்துடன் தனது ஓய்வை அறிவித்து. சச்சினின் நூறாவது சதம் அவரது இதுவரையிலான எண்ணற்ற சாதனைகளில் ஒன்று மட்டும் தான்.

Sunday, April 8, 2012

ரத்தக்கொழுப்பும் கெப்பாசிட்டி குறைந்த குடிகாரர்களும்



ரத்தக்கொழுப்பு பணக்காரர்களின், சோம்பேறிகளின், பருத்தவர்களின் உபாதையாக கருதப்படுவது. பரிணாமவியல் உணவு ஓய்வினோடு சம்பாதிக்கிற ஒன்றல்ல, அது உழைக்கும் இனத்தும் நிறமாக கருதப்படுகிற கறுப்பினோடு மிகுந்த தொடர்புடையது என சுட்டுகிறது.

Saturday, April 7, 2012

பனித்தவளைகள், ஐஸ்வைனுடன் உருவான சர்க்கரைநோய்

சர்க்கரை நோய் ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பதற்கு சிறுவயதில் நிறைய சர்க்கரை சாப்பிட்டது, உடம்பில் அபரிதமாய் சக்கரை இருப்பதில் இருந்து பெற்றோருக்கு இருக்கக் கூடும், கணையம் வேலை செய்யவில்லை என்பது வரை நம்மிடையே அசட்டுத்தனமான, சுவாரஸ்யமான, தகவல்பூர்வமான நம்பிக்கைகள், விளக்கங்கள் உள்ளன.