Wednesday, December 26, 2012

சாகித்ய அகாதமியை திட்டலாமா?-    

தமிழில் ஒரு தட்டையான எண்ணம் உள்ளது. அது ஒரு குறிப்பிட்ட வகையை சேர்ந்த எழுத்தாளர்கள் எழுதுவது அனைத்தும் இலக்கியம், முப்பது வருடங்கள் தொடர்ந்து இயங்கி மூத்த எழுத்தாளர் ஆனால் உடனே தனி அந்தஸ்து மரியாதை இடம் எல்லாம் தந்து விட வேண்டும் என. இது வெறும் குழு அரசியலும் மூத்தோரை கண்மூடித்தனமாய் மதிக்கும் இந்திய மனோபாவமும் தான்.

Saturday, December 22, 2012

தோனி எனும் துர்கனவுசமீப காலத்தில் இந்திய கிரிக்கெட்டுக்கு நிகழ்ந்து விட்ட ஆகப்பெரிய அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் தோனி தான்.

Friday, December 21, 2012

உடல் எடை, நீரிழிவு தொன்மங்களும் உலக அழிவு பிரச்சாரமும்நவம்பர் 14ஆம் உலக நீரிழிவு தினம். நீங்கள் இதைப் படிக்கும் போது உ-நீ-தினத்தை ஒட்டி நிறைய உடல்நலக் கட்டுரைகளை படித்திருப்பீர்கள். மீடியா ஒரு சடங்கைப் போல இந்தியா ஒரு நீரிழிவு நாடாக மாறி வருவதைப் பற்றி கண்ணை உருட்டி மிரட்டியிருக்கும். மருத்துவர்களும் தாம் படித்ததை வைத்து அச்சு பிசகாமல் உடலுழைப்பின்மை, அதிகமாக டி.வி பார்த்தல், துரித உணவு ஆகிய நவீன வாழ்க்கை நோய்க் காரணிகளை பட்டியலிட்டு அனைவரும் அரைமணிநேரம் நடைபழகி, காய்கறிகள் உண்டு எடையை குறைத்தால் நீரிழிவில் இருந்து தப்பலாம் என்றொரு பாராயணத்தை முடித்திருப்பார்கள்.

Thursday, December 20, 2012

மூப்பனாரும் இன்றைய தலைமுறையும்

தால்ஸ்தாய் எப்படி தன் பண்ணைகளில் வேலை பார்த்த நூற்றுக்கணக்கான அடிமைகளை விடுவித்தார் என்பதைப் பற்றி வகுப்பில் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஜி.கெ.மூப்பனாரை, அவருக்கு சொந்தமாக கிராமங்களே இருந்ததை, குறிப்பிட்டேன்.

Friday, December 14, 2012

அஷ்வின் ஒரே நாளில் எப்படி மட்டமான சுழல் வீச்சாளர் ஆனார்?
ரவிச்சந்திரன் அஷ்வினின் கிரிக்கெட் வாழ்வு இரண்டே வாரங்களில் தலைகீழாய் சரிந்து விட்டது. எங்கிருந்தோ வந்து உலகை வெற்றி கண்ட ஒரு இளம் சுழலர் மீண்டு வந்த இடத்திலேயே சென்று நிற்கிறார். கடந்த ஆஸ்திரேலிய பயணம் மற்றும் தற்போதைய இங்கிலாந்து டெஸ்டு தொடர்களில் அஷ்வினால் அதிக விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல அவரை ஆடுவது எதிரணியினருக்கு அநியாயத்துக்கு சுலபமாகி உள்ளது.

Monday, December 10, 2012

சுழலும் வேகமும்: இன்னும் மாறாத காலனிய மனநிலை


(டிசம்பர் மாத அமிர்தாவில் வெளிவந்தது)


தற்போது மீடியாவில் சூடுபறக்கும் விவாதம் நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா சுழலும் ஆடுதளங்களை தயாரிக்கலாமா அல்லது நடுநிலைமையான சூழ்நிலையை அளிக்க வேண்டுமா என்பது பற்றியே. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இங்கிலாந்து நிபுணர்களும் ரசிகர்களும் மட்டுமல்ல சில முன்னாள் இந்திய வீரர்களும் அநேகமாக அனைத்து ஊடகங்களும் இந்தியா சுழலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என கூறுவது தான். விநோதமாக இத்தகைய ஒரு விவாதம் வேறெந்த நாட்டில் கிரிக்கெட் தொடர்கள் ஒருங்கிணைக்கப்படும் போது எழாது. எல்லா நாடுகளும் தத்தமக்கு சாதகமான ஆடுதளங்களைத் தாம் அமைக்கின்றன.


Sunday, December 9, 2012

துப்பாக்கிப் பட விமர்சனமும் பசுமட விளம்பரமும்
சாருவின்ஓய்வுக்குபிறகு இலக்கிய மொழியில் சினிமா விமர்சனத்தை காரசாரமாக கௌதம சித்தார்த்தன் தான் எழுதி வருகிறார். இதற்கான ஒரு தேவை நிச்சயம் உள்ளது.
இந்த மாத தீராநதியில் அவரது துப்பாக்கிப் படக் கட்டுரை நன்றாக இருக்கிறது. இப்படத்தின் சிக்கலை தெளிவாக முன்வைக்கிறார். அதுவும் ஏன் தலைமை தீவிரவாதியை ஒரு இந்திய முஸ்லீமாக காட்டுகிறார்கள் என்கிற கேள்வி முக்கியம்.

Friday, December 7, 2012

எல்.ஐ.சியும் ஊனக் கட்டணமும்கடந்த முறை உடல்நலமில்லாமல் போன போது மருத்துவமனை செலவு லட்சங்களைத் தொட்டதால் இவ்வருடம் ஒரு உடல்நலக் காப்பீடு எடுக்கலாம் என எல்.ஐ.சியை அணுகினேன். முப்பது வயதைத் தொட்டுள்ளதால் (நெஞ்சு எக்ஸ்ரே! உள்ளிட்ட) பல பரிசோதனைகளை பண்ணிக் கொள்ள வேண்டும் என்றார்கள். பொறுமையாக ஒவ்வொன்றாக முடித்து அத்தனை ஆவணங்களும் பணமும் செலுத்திய பின்னும் காப்பீடு அட்டை தாமதமாகி வந்தது.

Wednesday, December 5, 2012

சச்சின் ஓய்வு: நாம் சொல்லி அவர் போகலாமா?
கிரெக் சாப்பல் இந்திய பயிற்சியாளராக இருந்த போது இளைஞர்கள் அணிக்குள் சுதந்திரமாக இயங்கும் சூழலை உருவாக்க முயன்றிருக்கிறார். அப்போது அணிக்குள் இருந்த மூத்த வீரர்கள் முன்னிலையில் பேசக் கூட இளைய வீரர்களுக்கு பெரும் தயக்கம் இருந்தது. ஒரு ஜனநாயக நவீன ஆட்டத்தில் இப்படியான படிநிலை அச்சம் ஏன் என அவருக்கு குழப்பமாக இருந்தது.

அழகியசிங்கரின் அப்பாவும் புத்தகங்களும்இந்த மாத அமிர்தாவில் அழகிய சிங்கர் புத்தகங்கள் வாங்கி சேர்க்கும் பழக்கம் பற்றியும் அது சம்மந்தமாக வரும் தொந்தரவுகள் பற்றியும் சுருக்கென்ற நகைச்சுவை மிக்க பத்தி ஒன்று எழுதியிருக்கிறார். அதில் என்னை கவர்ந்தவை:

Monday, December 3, 2012

வாழ்வின் ஆகப் பெரும் மகிழ்ச்சி


ரெண்டு வருடங்களுக்கு முன் ஒரு இளங்கலை மாணவனுடன் பேசும் போது அவன் வகுப்பு முடிந்ததும் இரவு முழுக்க ஆட்டோ ஓட்டுவதாக சொன்னான். இடையே கிடைக்கும் ஓய்வில் தான் படிப்பு. நெகிழ்ந்து போனேன். கல்வி என்பது சாதாரண மனிதர்களுக்கு எப்படியான பொக்கிஷம், அதனை அடைய எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என புரிந்தது.

 அவன் நல்ல புத்திசாலி பையன். இரண்டாம் வருடத்தின் போது நிறைய மட்டம் போடுவான். கண்டிப்பேன். ரோட்டரேக்ட் எல்லாம் வீண்வேலை என்று அறிவுறுத்துவேன். சிரிப்பான். அடுத்த வருடம் படிப்பு மட்டும் தான் என்பான். இன்று கிடைத்த பிறந்தநாள் வாழ்த்துகளில் அவன் காலையில் அழைத்து சொன்ன சொற்களைத் தான் மதிப்பற்றதாக கருதுகிறேன். இவர்களோடு இருப்பது தான் வாழ்வின் ஆகப்பெரும் மகிழ்ச்சி!

Sunday, December 2, 2012

கொல்லப்பட்டவனும் கடவுளும்
ஒரு கொலையை ஆதரிக்க
நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல நேர்கிறது!
ஒரு கொலைக்கு
உண்மையில்
இவ்வளவு நியாயங்களா இருக்க முடியும்?