Wednesday, February 29, 2012

இந்தியாவில் ஆல்ரவுண்டர் சாத்தியமா?
இப்போதை மூன்று பேர் இருக்கிறார்கள். பதான், அஷ்வின், மற்றும் ஜடேஜா. ஆனாலும் அணித்தலைமையை பொறுத்தவரையில் இவர்கள் பந்து வீச்சாளர்கள் தாம். ஏனென்றால் நமக்கு அப்படி ஆல்ரவுண்டர்களின் பாரம்பரியம் இருந்ததில்லை.

Saturday, February 25, 2012

ஒரு இரங்கற்பாவின் துணுக்குகள் - டேன் பாகிஸ்உன் கண்களை மூடி விட்டேன்.
உன் கரங்களை திரும்ப வைத்து விட்டேன் அவற்றின் இடத்தில்.
உனது பாதங்கள் என்னை பரிதாபத்துடன் பார்க்கின்றன:
நான் அநாவசியம்.
என் கைகளை பார்க்கிறேன்.

Friday, February 24, 2012

எதிர்பாரா சந்திப்புகள் -டேன் பாகிஸ்ஒரு கண்ணாடியை எதிர்பாராது பார்க்கிறோம்; திரும்பிக் கொள்ள சற்று தாமதமாகி விடுகிறது.
என்ன புதுசு, நாம் மாறவே இல்லை என்பது தான் குட்பை பார்த்து ரொம்ப நாளாகிறதே.

Thursday, February 23, 2012

நீட்சேவும் செந்திலும்நீட்சேயின் “அவ்வாறு சொன்னான் ஜாருதுஷ்டிரன் கதையில் ஜாருதுஷ்டிரன் பல வருடங்கள் மலையில் துறவியாய் வாழ்ந்த பின் மனிதர்களை சந்திக்க ஒருநாள் இறங்கி வருவான். அப்போது ஒரு வயதான துறவி அவனை தடுப்பார். “வேண்டாம். மிருகங்கள் மத்தியில் மேலும் பாதுகாப்பாய் இருப்பாய். ஆனால் இந்த மனிதர்கள் மோசமானவர்கள். அவர்களிலும் மேலானவர்களை அவர்களுக்கு பிடிக்காது. உன்னை கொன்று போட்டு விடுவார்கள் என்பார். அதற்கு ஜாருதுஷ்டிரன் “ஏன் அப்படி சொல்கிறீர்கள். நான் பெற்ற ஞானத்தை மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? என்பான். அதற்கு முதியவர் “மனிதர்களுக்கு உன்னதமானவர்களை தாங்க முடியாது. அவர்களுக்கு தேவை பொழுதுபோக்குக்கு ஏற்ற கோமாளிகள் தாம் என்று பக்குவமாய் சொல்லிப் பார்ப்பார். பிறகு ஜாருதுஷ்டிரன் கேட்காமல் மனிதர்களிடத்து சென்று உதாசீனப்படுத்தப்பட்டு வருந்துவான். இருநூறு வருடங்களுக்கு பின்னரும் இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டே வருகிறோம்.
ஒரு மனிதன் முன்னேறாமால் சீரழிந்தால் அவனை அன்புகாட்டி விசனிப்பார்கள். அதே மனிதர் உயர்ந்து வந்தால் கரித்துக் கொட்டுவார்கள். மனிதர்களுக்கு தம்மிடையே ஒருவன் வளர்வது தமது தாழ்வை சுட்டிக் உணர்த்தி உறுத்தல் தரும். அதனாலே அவர்கள் பிச்சைக்காரர்களையும் குஷ்டரோகிகளையும் அடிமைகளையும் சுற்றி வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். படையப்பா படத்தில் பெண் பார்க்க போகும் செந்தில் உணர்வது போல் என்னதான் செய்தாலும் பக்கத்தில் இரும்பு இருப்பதால் வெண்கலம் தங்கமாகி விடப் போவதில்லை.

Friday, February 10, 2012

புசிக்கப்படுவதன் அவலம்ஒரு கசப்பான கனியை
எனக்குத் தருகிறாய்
மனமும்
உடலும்
சின்ன சின்ன
எண்ணங்களும் உணர்வுகளும்
கசக்கின்றன

இஷிகாவா தொக்குபுக்கு (ஜப்பான், 1885-1912) - தமிழில் ஆர்.அபிலாஷ்
1. ஒரு போதும்
மறக்க முடியாது
எனக்கு காட்ட
கண்களில் நீர் வழிய
ஒரு கைப்பிடி மணலை
எடுத்து நீட்டியவனை

Thursday, February 9, 2012

நித்திய இச்சையின் தங்க ஆப்பிள் - மிலன் குந்தெரா (தமிழில் ஆர்.அபிலாஷ்)
... அவர்கள் அறிவதில்லை தாம் நாடுவது
வேட்டைப் பிராணியை அல்ல, துரத்தலை என்று
-         பிளைஸ் பாஸ்கல்
-          
மார்டின்
எனக்கு சாத்தியமில்லாத ஒன்று மார்டினுக்கு இயலும். எந்த தெருவிலும் எப்பெண்ணையும் நிறுத்துவது. அவனை அறிய வந்திருந்த நீண்ட காலத்தில் நான் அவனது இந்த திறனால் மிகவும் லாபமடைந்திருந்தேன் என்று சொல்லியாக வேண்டும்; ஏனென்றால் அவன் அளவுக்கு எனக்கும் பெண்களை பிடிக்கும், ஆனால் அவனது தயக்கமற்ற துணிவு எனக்கு இல்லை.

Wednesday, February 8, 2012

“பசித்த பொழுதில்”: பிச்சைப்பாத்திரத்தில் மழைத்துளிகள்மனுஷ்யபுத்திரனின் பசித்த பொழுதில் அக்கறை கொள்ளும் விசயங்களில் ஒன்று பாசாங்கு.
 பொதுவாக அவரது அனைத்து தொகுப்புகளிலும் ஆதாரமாக உள்ள அக்கறை இது. நவீனத்துவ இலக்கியத்தில் குறிப்பாக சிறுகதைகளில் மத்திய வாழ்வின் பாசாங்குகள் குறித்து நுட்பமாக கையாளப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன், சுஜாதா, சு.ரா ஆகியோரை உதாரணமாக சொல்லலாம்.

Tuesday, February 7, 2012

செகோவின் 15 கதைகளும் தமிழ்ச்சூழலில் வாசக பிரசுரமும்இணையம் இன்று பிரசுரத்தை சுலபமாக்கி உள்ளது நமக்கு தெரியும். இதன் அடுத்த கட்டம் சுயபிரசுரம். தமிழில் பிரசுர வாய்ப்பில்லாத எழுத்தாளர்கள் தாம் இதை செய்து வந்தார்கள். அதுவும் தங்கள் நூல்களைத் தாம். இன்னொரு பக்கம் வியாபாரிகள், அரசியல் செயல்பாட்டாளர்கள், சித்தாந்தவாதிகள், பத்திரிகையாளர்களும், நிறுவனங்களும் பதிப்பித்தார்கள்.

Monday, February 6, 2012

மற்றொரு இனிய பயணமும் சுவையான உரையாடல்களும்கடந்த சனிக்கிழமை (04-02-12) திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளியில் நானும் முத்துக்கிருஷ்ணனும் உரையாற்றினோம். எனக்கு இது இரண்டாம் முறை. முத்துக்கிருஷ்ணன் ஊடகம் பற்றி நான் சிறுகதைகள் குறித்து. அந்த பள்ளியில் உள்ள இனிமையான உபசரிப்பு மற்றும் அமைதியான சூழல் ஒரு பயணியின் உல்லாசத்தை ஏற்படுத்தும். அங்குள்ள புத்திசாலியான மாணவர்கள் தொடர்ந்து இலக்கியம் படிப்பு மீது நமது நம்பிக்கையை வலுப்படுத்துவார்கள்.

Thursday, February 2, 2012

அவமானத்தின் உறவுஎன்னை அவமானப்படுத்தியவர்கள்
மிகக் குறைவாகவே
என்னைப் பற்றி அக்கறை கொண்டிருக்கிறார்கள்
கவலைப்பட்டிருக்கிறார்கள்
யோசித்திருக்கிறார்கள்
பல பேர் என் பெயரை கூட
சரிவர அறியாதவர்கள்