Tuesday, January 31, 2012

ஒரு கத்தியின் அம்மணம்ஒரு கத்தியை போல்
பூமிக்குள்
மறைத்துக் கொள்ள வேண்டும்
என் உடலை

Sunday, January 29, 2012

நிழல்என் நீண்ட நாள் தோழியும் வகுப்புத் தோழியுமான ஆஷாவின் அம்மா இறந்து போன சேதி அறிந்ததும் எனக்கு அதிர்ச்சியோ வருத்தமோ ஏற்படவில்லை. இந்த செய்தி ஆஷாவை எந்த அளவுக்கு சிதைத்து பிழியப்போகிறது என்பதை கற்பனை செய்து பார்த்தும் கூட என் மனசை எந்தவொரு துக்க அலையும் புரட்டிப் போடவில்லை. எத்தனையோ வருடத்து நெருங்கிய நண்பர்களாய் இருந்தும் அவளது அம்மாவின் மரணம் என் மனதின் நரம்புகளை புடைத்து வீங்க செய்யாமல் வேகமாய் ஓடிக் கலந்தது ஏதோ ஒரு விதத்தில் என்னை நெருக்கி பிசைந்தவாறிருந்தது. இது சார்ந்த சுயபரிசீலனையில் ஆழ்ந்து பயணித்தவாறே வகுப்பறையை அடைந்து விட்டிருந்தேன்.

Saturday, January 28, 2012

ஒரு பரிசு1
குணா வீட்டுக்குள் நுழைந்ததும் வெம்மையை உணர்ந்தான். திரைகளை விலக்கி காற்றை நுழைய விட்டான். உஷ்ணத்தில் திரைகள் விம்மின. அவன் கற்பனையை அது பலவிதங்களில் கிளர்த்தியது. குடியிருப்புக்கு வலமாய் ரயில் தண்டவாளம். அதை சைக்கிள், பைக், கால்கள் தயக்கமின்றி குறுக்கிட்டன. ஒரு குழந்தை தண்டவாளத்தில் இருந்து எழுந்திருக்க மாட்டேன் என்று அடம் பிடித்தது. அப்பா மன்றாடி வலுக்கட்டாயமாக தூக்க முயன்று இடுப்பில் வைத்ததில் அது பொத்தென்று விழுந்தது.  நழுவி குதித்ததோ? ரயில் சைரன். மக்கள் தண்டவாளத்தை சுற்றி கூடினர். குணா திரையை மூடினான்.

Thursday, January 26, 2012

ஒரு மழை முடிந்த நாளில்


ஈரமும் சகதியும்
சிதறும் வாகன சக்கர சாக்கடையும்
மிச்சமுள்ள மழைத்துளிகளும்
அடையாளமாகிய இந்நாட்களில்
நாங்கள்
வீட்டில் அமர்ந்தபடி
சதா கொசுக்களை பற்றி
எச்சரிக்கையுணர்வுடன் இருக்கிறோம்

Tuesday, January 24, 2012

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்: நான்கு கேள்விகள்தோனியின் உடல் மொழி தோல்விமனப்பான்மையை காட்டுகிறது. உண்மையா?

உண்மை தான். இதற்கு மூன்று காரணங்கள் தோன்றுகிறது.

தோனி என்றைக்குமே உணர்ச்சிவசப்பட்டு வெளிப்படையாக ஆதரவு காட்டும் அல்லது கண்டிக்கும் அணித்தலைவர் அல்ல. இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று வந்த போது அவரது இந்த அடக்கமும் அக்கறையின்மையும் தான் போற்றப்பட்டன. இப்போது நாம் ஒரு தோதான காரணம் கிடைக்காததால் அதே பாராட்டிய பண்புகளையே குறைகளாக முன் வைக்கிறோம்.

Friday, January 20, 2012

ல‌ஷ்மி மணவண்ணனின் “அப்பாவை புனிதப்படுத்துதல்”: அதிகாரம் எனும் சதுரங்க விளையாட்டுல‌ஷ்மி மணிவண்ணன் கவிதைகளை உணர்வெழுச்சிகளால், உருவகங்கள், உவமைகள், குறியீடுகளால், தர்க்கத்தால், எளிய சித்தரிப்புகளால் சீராக கட்டி எழுப்புவதில்லை. ஒட்டுமொத்தமான ஒரு தரிசனத்தை, புதிய கண்ணோட்டத்தை, கண்டுபிடிப்பை தர அவை முனைவதில்லை. ல‌ஷ்மியின் கவிதைகளில் நாம் காண்பது கூர்மையான அவதானிப்புகள், குறிப்பாய் அதிகாரம், கலாச்சார அரசியல், பிம்பங்கள் நம் மனப்பரப்பில் ஏற்படுத்தும் குழப்பம், விழுமியங்களும், அறமும் அதிகாரக் கருவிகளாதல் பற்றியவை.

Thursday, January 19, 2012

கிரிக்கெட்டுக்கு வயதுண்டா?
இந்திய கிரிக்கெட்டின் பொற்காலத்தின் நாயகர்களான சச்சின் திராவிட் லக்‌ஷ்மண் ஆகிய மூவரும் அலிபாபாவின் விளக்குக்குள் மாட்டிய ஜின்னைப் போல் ஒரு சிக்கலை சந்திக்கிறார்கள். வெளியே வந்தாலும் உள்ளே இருந்தாலும் அவர்கள் மீடியாவிடம் கட்டுண்டே இருக்க வேண்டும்.

Saturday, January 14, 2012

விகடன் இணையத்தில் “கால்கள்” குறித்த பதிவு“ஆர்.அபிலாஷ் எழுதிய 'கால்கள்' எனும் நாவல். இது நடக்கமுடியாத ஒரு பெண்ணின் வாழ்க்கைத் துயரத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்த துறையில் இதுவரை எந்த நூலும் தமிழில் எழுதப்படவில்லை. அந்த அடிப்படையில் இது சிறப்பு வாய்ந்தது.”

நன்றி விகடன்
http://news.vikatan.com/index.php?nid=5892

ஒரு போட்டி விநோதமாக ஒரு மனிதனும் சிங்கமும் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள். இயல்பாகவே இருவருக்கும் போட்டி ஏற்பட்டது. மெல்ல மோதலாகியது. இப்படி தொடர்கையில் ஒருநாள் அவர்கள் ஒரு சிற்பத்தை கண்டார்கள். அதில் ஒரு சிங்கத்தின் குரல்வளையை ஒரு மனிதன் நெறித்து கொண்டிருந்தான். மனிதன் சொன்னான் “பார் மனிதனின் வலிமையை பார். அப்போது சிங்கம் சொன்னது “ப்பூ இதென்ன பெரிய விசயம்... நாங்கள் சிற்பம் வடித்தால் ஒரு சிங்கத்தின் காலின் கீழ் 20 மனிதர்கள் நசுங்கிக் கொண்டிருப்பார்கள்.

வரலாறு வெற்றியாளர்களால் எழுதப்படுகிறது
(ஏசாப் நீதிக்கதை)

சில அதிகார அசடுகளின் அடாவடித்தனங்களை பார்க்கும் போது நினைவு வந்த கதை

Friday, January 13, 2012

புத்தக கண்காட்சியை ஏன் நவீனப்படுத்தக் கூடாது?
புத்தக கண்காட்சி மிக குழப்பமாக இருக்கிறது. ஒரு கற்காலத்தில் நடந்து வருகிறது. பலரும் குறிப்பிட்ட நூல்களை தேடி அலைவது காண வருத்தமாக உள்ளது.

ஒரு பிரபலத்துடன் உரையாடுவது


ஒரு பிரபலத்தை பின்னால் இருந்து கவனிக்கும் போது
இன்னும் இன்னும்
தெளிவாகிறது
அவர் முகம்

Monday, January 9, 2012

A Writer's Road - Nandini Krishnan

Fountain Ink பத்திரிகையில் வந்துள்ள எனது நேர்காணல்

Tamil Nadu has prided itself on its language fervently enough and long enough to stop Hindi from being declared the national language, and to set off the trend of renaming cities. Most of its politicians are from the cine industry, and a fair share used to be writers, poets and lyricists. In a state that draws its name from the language, how viable is it to be a writer in that language? Who reads Tamil fiction, and what role has the Sri Lankan Diaspora played in taking it to the world stage? At a time when writers of English literary fiction are given meaty advances, and blitzed around the world on book tours, we take a look at whether a writer of Tamil fiction can get by on the money he makes from his books alone, what affects the sales, how writers have adapted to changes in technology, and what stature this body of literature aspires to.

ஆண்-பெண் நட்பு: காமம் மற்றும் சமஅந்தஸ்து வெறும் தோழியான ஒரு girl friendஐ எப்படி அழைக்க? நான் பங்கேற்ற ஆண்-பெண் சமநிலை பற்றின ஒரு நீயாநானா விவாத படப்பிடிப்பின் போது இந்த சிக்கலை பல பங்கேற்பாளர்கள் ஏதோ புதுசு என்பது போல் திடுக்கிட்டவாறு எதிர்கொண்டனர். கோபிநாத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் “அந்த கெர்ல் பிரண்ட் இல்லீங்க என்று சொல்ல நேர்ந்தது. Female friend என்ற சொல் ஏதோ மிக்ஸி கிரைண்டர் போன்ற இரைச்சலை கொண்டுள்ளது. சிநேகிதி, தோழி ஆகிய பதங்களை வானம்பாடிகளில் இருந்து இடதுசாரிகள், பெண் பத்திரிகைகள் வரை அர்த்தம் திரித்து விட்டனர். ஆண்நண்பர்களும் இருக்கும்பட்சத்தில் ஒரு பெண்ணின் தோழி கெர்ல் பிரண்டா வெறும் பிரண்டா? ஆனால் இது ஒரு சொல்லாக்கம் பற்றின பிரச்சனை அல்லவே!

Thursday, January 5, 2012

Catcher in the Rye – அன்பும் வெறுப்பும் சந்திக்கும் இடம் ஜெ.டி சாலிங்கர் எனும் ஆநாமதேய ஆசாமி Catcher in the Rye எனும் 200 பக்க நாவலை எழுதி 80 வருடங்களுக்கு முன் அதிவிரைவில் உலகப்புகழ் பெற்றார். இப்போதும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட இந்நூலின் பிரதிகள் வருடந்தோறும் விற்கப்படுகின்றன. பின்னர் சாலிங்கர் குறிப்பிடும்படியாய் ஒன்றும் எழுதவில்லை என்பது மட்டுமல்ல அவர் தன்னைப் பற்றி பொது அரங்கில் எந்த தனிப்பட்ட வாழ்வு சார் அடையாளத்தையும் விட்டுச் செல்லாமல், மீடியாவிடம் இருந்து பதுங்கி நாவலுக்கு முன்பான ஆநாமதேய ஆசாமியாகவே வாழ்ந்து மறைந்தார்.