Tuesday, July 19, 2011

விடுப்பில் இருக்கும் நாய்



ஜுரத்தில் இருக்கும் நாய்
அப்பால்
பாலத்தில் செல்லும் ரயிலின்
அலறலுக்கு
மெல்ல
எழுந்து படுக்கிறது
ஓசை அடங்கியதும்
மூச்சு சீராகிறது
பக்கத்து பால்கனியில்
விளையாடும் குழந்தைகளை நோக்கி
இருமுறை குரைத்து விட்டு வருகிறது
தன் எஜமானனுக்காக
அது காத்திருக்கவில்லை

Saturday, July 9, 2011

ஒரே முகபாவம் கொண்ட பூனை



ஒரே முகபாவம் கொண்ட பூனையின்
முகம்
வெளிப்படையாய் காட்டுவது
உண்மை அல்ல
ஏனெனில்
அம்முகம் ஒருபோதும் மாறாமல்
இருக்கிறது

Tuesday, July 5, 2011

பீனிக்ஸ் பறவை ஏன் ஒரே நாளில் எழுவதில்லை?

பவுன்சரை தவிர்க்க திணறும் கோலி
நடந்து வரும் மே.இ தீ கிரிக்கெட் தொடரில் மூன்று திறமையான இந்திய மட்டையாளர்கள் தம் கன்னி ஆட்டத்தை ஆடினார்கள். பத்ரிநாத்தும், மனோஜ் திவாரியும் ஒருநாள் போட்டிகளில், விராத் கோலி டெஸ்ட் போட்டிகளில். மூவருமே சர்வதேச கிரிக்கெட் எவ்வளவு சிரமமானது என்று தெரிந்து கொண்டார்கள்.