Thursday, May 26, 2011

வேற்றுகிரக வாசிகள் - புக்காவஸ்கிநீங்கள் நம்ப மாட்டீர்கள்
மிகக் குறைந்த சச்சரவு அல்லது
துயரத்துடன்
வாழ்ந்து செல்லும்
நபர்கள் உள்ளார்கள்.
நன்றாக ஆடை அணிவார்கள், உண்பார்கள்
தூங்குவார்கள்.
தாம்பத்திய
வாழ்வில்
திருப்தியாக இருப்பார்கள்.

Wednesday, May 25, 2011

கனிமொழியும் நவீன சட்டாம்பிள்ளைகளும்கனிமொழியின் ஜெயில் வாசத்தின் போது வரும் எதிர்வினைகளும் நக்கல்களும் வக்கிரமாக உள்ளன. அவர் பாலியல் ரீதியாய் ஒழுக்கங் கெட்டவர் என்பதில் இருந்து அவரது குளியலறை ஜெயிலுக்குள் எங்கிருக்கும் என்று வினவுவதை வரை இவை கனிமொழியை ஒரு விபச்சாரி போல் சித்தரிக்கின்றன.

Tuesday, May 24, 2011

மகாஎழுத்தாளர்களின் வரலாறுதமிழில்
ஆரம்பத்தில்
ஒரே ஒரு மகாகவிஞன் இருந்தான்
அவன்
பெருந்தனிமையில்
ஒரு துர்கனவில்
தனக்குத்தானே பேசி தன்னிடமே முரண்பட்டு
தன்னையே மன்னித்து மறைவாய் தனக்கே குழி பறித்து
கடவுளிடம் தன்னை காப்பாற்ற மன்றாடினான்

Friday, May 20, 2011

நட்சத்திர பார்வையாளன் - - லூயிஸ் மக்நீஸ்நாற்பது வருடங்களுக்கு முன்பு (வேறு யாருக்கும் இல்லையென்றாலும், எனக்கு இந்த எண் சற்று ஈர்ப்புடையது) அது ஒரு அற்புதமான நட்சத்திர இரவு

பால்மண்டலக் காதல் - அட்ரியன் ஹென்றிஅஸ்தமனத்தில் காலடிகளை வெதுவெதுப்பாக்கு
படுக்கைக்கு நாம் போகுமுன்
ஓரியனின் ஒளியில் உன் புத்தகம் படி
சிரியஸ் தலையருகே காவல் நிற்க
பிறகு எம்பி, கோள்களை அணைத்திடு

Wednesday, May 18, 2011

மேற்கிந்திய தீவு பயணம்: காயங்களில் இருந்து ஓய்வுக்குநேரடி ஒளிபரப்பு துவங்காத ஒரு காலத்தில் அனைத்து அணிகளுக்கும் ஒரு கொடுங்கனவாக திகழ்ந்த மேற்கிந்திய தீவுப்பயணங்கள் மெல்ல மெல்ல சிரமமான தொடர்களாக மாறி பின்னர் இப்போது ஒரு எளிய சுற்றுலாவாக முடிந்து விட்டது.

Tuesday, May 17, 2011

சின்ன தலைவலியில் இயங்கும் உலகம்இன்று முழுக்க
ஒரு சின்ன தலைவலியுடன்
வேலைகள் செய்வதற்கு பழகுகிறேன்

எரிச்சலானவை சுவாரஸ்யமாவதும்
வழக்கமான தருணங்களில்
கோபமே வராததையும்
கவனிக்கிறேன்

Sunday, May 15, 2011

மிக அதிகமாக அன்பு செய்யப்படும் போது
மிக அதிகமாக அன்பு செய்யப்படும் போதும்
மிக அதிகமாக வெறுக்கப்படும் போதும்
நாம் இருக்கிறோம்
உறக்கத்தில் மரிப்பதை போல

Saturday, May 14, 2011

முகுந்தின் குழந்தைகள் குழந்தைகள் அல்ல
குழந்தைமையை, அதன் பரிசுத்த நிலையை அல்லது லயிப்பை பேசும் கவிதைகள் அல்ல முகுந்த் நாகராஜன் எழுதுவது. அவரது கவிதைகள் வாழ்வின் மற்றொரு முக்கியமான கலாச்சார சடங்கை காட்டுகின்றன. அன்றாட உறவாடல்களில் இருந்து சமூகம் கடவுள் பிரபஞ்சத்திடம் வரை நாம் மேற்கொள்ளும் விளையாட்டுத்தனம், ஏமாற்றுகள், தந்திரங்கள், இவற்றின் குழந்தைமை.

Thursday, May 5, 2011

கிரிக்கெட்டில் ஆசிய மேலாதிக்கம்: விழுமியங்கள் காலாவதியான கதை
இங்கிலாந்து கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய வகையில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கோலோச்சியது. அக்காலத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர்கள் கூட லார்ட்ஸ் பெவிலியனில் அனுமதிக்கப்படாத அவமதிப்புகள் நடந்ததுண்டு. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா தன் ஆட்டத்தரம் மற்றும் அணி விழுமியங்கள் கொண்டு பத்து வருடகாலம் மேலாதிக்கம் செலுத்தியது. இந்த ஒரு நூற்றாண்டு வெள்ளை ஆதிக்கம் ரெண்டாயிரத்துக்கு பிறகு குறிப்பிட்ட வகையில் மாறியது.

Tuesday, May 3, 2011

சுஜாதா விருது நிகழ்ச்சி 2: சில கோரிக்கைகள் 
தமிழில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு இரு உத்தேசங்கள் இருக்கலாம். ஒரு எழுத்தாளனை வெளிச்சத்துக்கு கொண்டு வருதல். அல்லது ஏற்கனவே வெளிச்சத்தில் டாலடிக்கும் ஒருவரை மேலும் அங்கீகரித்தல். எப்படியும் வெளிச்சம் நல்லது தான்.