Thursday, April 28, 2011

உலகக்கோப்பை: பிரதிகளின் குழப்ப சீட்டாட்டம்இந்திய கிரிக்கெட் தன்னளவில் குழப்பமானது. உலகக்கோப்பைக்கு பின் அது வழக்கம் போல் உலகக் கிரிக்கெட்டையும் பார்வையாளர்களையும் மீடியாவையும் நிபுணர்களையும் குழப்புகிறது.

Tuesday, April 12, 2011

“ஊருநேச்சை”: கடவுள்களாலும் சாத்தான்களாலும் நெருக்கப்படும் மனம்ஹாமீம் முஸ்தபாவின் ஊருநேச்சை தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஒரு விமர்சன குரலை தொடர்ந்து கேட்கிறோம். சமூக அவலங்கள், பண்பாட்டு கூறுகள் மற்றும் சிக்கல்கள், பெண்ணியம், வரலாற்று நினைவுகள், மதத்தின் நடைமுறை முரண்பாடுகள் ஆகியவற்றை நேரடியான மொழியில் விவாதிக்கும் இக்கவிதைகள் எந்த பாசாங்குமற்றவை. இக்கவிதைகளை தனது விமர்சனங்களை தெரிவிக்கவும் கலாச்சார ஆவணமாக்கவும் பிரதானமாய் ஒரு புறம் உத்தேசிக்கிறார். இக்கவிதைகளுக்கு ஒரு நுட்பமான தளமும் உண்டு. அது குழந்தைகளின் களங்கமற்ற கூர்மையான கேள்விகளாலும், எளிய பாமர மனதின் பேய் சார்ந்த விசித்திர கற்பனைகளாலும் ஆனது. அதாவது முஸ்தபாவற்ற ஒரு இடம் இக்கவிதைகளில் உள்ளது.

Wednesday, April 6, 2011

உலகக் கோப்பை வெற்றி தோல்விகள், பாகிஸ்தான் மற்றும் தயார்நிலை எதிர்வினைகள்
பாகிஸ்தான் ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் ஏறத்தாழ ஒரே மாதிரி ஆடி ஜெயிக்கும் தோற்கும். அது இதுவரை யாரையும் ஏமாற்றியதோ நிறைவடைய வைத்ததோ இல்லை. ஒரே அணிக்குள் பலமாதிரி அணிகள் இருக்கும். அதே போல் ஒரே அணி பலமாதிரியும் ஒரே சமயத்தில் ஆடும். பதினொரு பேரும் பரஸ்பர சந்தேகத்துடன் வெவ்வேறு திசைகளில் ஆடுவார்கள்; சகோதர பிணைப்புடன் தனிப்பெரும் ஆற்றலாகவும் எதிரி மீது பாய்வார்கள்.

Sunday, April 3, 2011

மீண்டும் ஒரு திருமண நாள் கவிதை
இவளை மணக்க கொடுத்து வைத்திருக்கிறேன்
பலரும் சொல்கிறார்கள்
நம்ப முடியவில்லை
சோதிடர் அன்றே சொன்னார்
வேண்டாமென்று
நம்ப முடியவில்லை
இது திருமணமில்லை
அவள் பச்சாதாபப்பட்டு என்னுடனும்
நான் அறிவிழந்து அவளுடனும்
இருக்கிறோம்
அதையும் தான்

Saturday, April 2, 2011

“தேகம்”: பிரியமும் வதையும் ஒன்றா?
சாரு நிவேதிதாவின் சமீப நாவல் தேகம் பொதுவாக ஒரு வதையை பற்றின நாவல் அல்ல. அதனாலே ஒரு தொழில்முறை வதையாளனின் குறிப்பிட்ட தொழில் அனுபவத்தை சொல்ல தொடங்கி வேறு பல நினைவுகளுக்கும் கேள்விகளுக்கும் செல்கிறார். எதையும் முடிக்காமல் அங்கங்கே தாவி சென்றாலும் நாவலின் உத்தேசத்திற்கு அவர் நியாயம் செய்திருக்கிறார். காமம், நட்பு, மணவாழ்வு உள்ளிட்ட உறவுகளில் அடுத்தவர்களையும் சுயமாக நம்மையும் ஏன் வதைத்து கொள்கிறோம் என்ற தீவிரமான விசாரணை நாவலில் உள்ளது. ஆனால் பொதுவாசகனுக்கு இரண்டு சிறு பொறிகள் உள்ளன.

ஆஸி, தெ.ஆ வெளியேற்றங்கள்: வீழ்ச்சியின் தொலைவும் கசப்பின் சுவையும்இந்த உலகக் கோப்பையில் மிக மௌனமாக இரு நட்சத்திரங்கள் உதிர்ந்துள்ளன. ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் நுழைய வேண்டிய வாசல் வழி மிகுந்த குழப்பத்துடன் வெளியேறி விட்டன. மிக இனிமையான ஒரு நாளின் முடிவில் வந்த எதிர்பாரா துர்கனவை போல் இத்தோல்வியை எப்படி விளக்க என்றே இரு தோல்வியுற்ற அணித் தலைவர்களுக்கும் புரியவில்லை.