Saturday, March 26, 2011

தீராமல் பசித்த நாள்
இன்று முழுக்க
பசித்தபடியே இருக்கிறது
பசி நெருப்பில்
தசைகளும் எலும்புகளும் கொழுப்பும்
மெல்ல மெல்ல
வேகிறது

இன்று முழுக்க
எல்லாரிடமும் இனிமையாக பேசிக் கொண்டிருக்க
கரித்து கொட்டியவாறிருக்க
வருகிறது

Tuesday, March 22, 2011

தலைகீழ் பிரயாணம்


அவர்
என்றும் போல்
விடிகாலையில்
மொட்டைமாடியை சுற்றி சுற்றி
தளர் ஓட்டம் செல்லும் போது

மல்லாந்து விழுந்து ஓடியது
ஒரு கரப்பான்பூச்சி
வாசல் கூரையில்
தலைகீழாக பிரயாணித்தது
பல்லி

விருதை காப்பாற்றுவது எப்படி?


ஒரு பிரபல விருதை ஒருங்கிணைக்கும் பிரபல நபரிடம் பேசிக் கொண்டிருந்தேன். விருதுகளின் தேர்வில் சார்புநிலை தவிர்ப்பது எப்படி என கவலைப்பட்டார். அவரிடம் ஒரு தீர்வும் இருந்தது.

Monday, March 21, 2011

இல்லாத கையும் பாராட்டுகளும்
எங்கள் கல்லூரியின் கலைநிகழ்ச்சிகளின் போது மேடை ஆட்டத்துக்கு இணையாக பார்வையாளர் பகுதியில் இருந்து ஒரு மாணவன் ஆவேசமாக நடனமாடிக் கொண்டிருந்தான். ஒரு முழங்கை இல்லாத மாணவன். நிறைய மாணவர்கள் கூட ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களை மாணவிகள் மிகுந்த ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த கையற்ற மாணவனை ஒரு ஜோடி கண்கள் தனியாக கவனித்தன.

Saturday, March 19, 2011

பனி இன்னும் பொழிகிறதுடேவிட் எலியட் (வட அமெரிக்கா)
DAVID ELLIOTT (வட அமெரிக்கா)

வெண் திரைச்சீலையில்
சிலந்தி ஏறும்
பனி இன்னும் பொழிகிறது

Wednesday, March 16, 2011

உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதால் யாருக்கு அனுக்கூலம்?
2011 உலகக் கோப்பை கால் இறுதியை நெருங்கப் போகும் நிலையில் உள்ளூர் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் ஊகங்களும் எதிர்பார்ப்புகளும் பொய்யாகி உள்ளன. சுவாரஸ்யமாக வெள்ளைகார நிபுணர்கள் ஊகித்தவை நிஜமாகி உள்ளன.

Monday, March 14, 2011

நீல நிற நாரை
லெஸ்லி எய்னெர் (வட அமெரிக்கா)
LESLEY EINER (வட அமெரிக்கா)

 புயலைத்
திடமாக்கும்
உறைந்த ஊசியிலை மரங்கள்

holding
the shape of the wind
the frozen pines

Sunday, March 13, 2011

குளிர்கால மழைமைக் டில்லன்
      MIKE DILLON  (வட அமெரிக்கா)
குளிர்கால மழை:
ஒரு காகம் உற்று நோக்க குனியும்
மின்கம்பியில் இருந்து

Winter rain:.
a crow peers down
from the power line

Wednesday, March 9, 2011

வேடிக்கையான அற்புதங்களும் உலகக் கோப்பையும்
ஆடுதளங்களை பொறுத்தமட்டில் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் ஒரு ஒற்றுமை அங்கு சவுரவ் கங்குலி போன்றவர்கள் கூட அபாயகரமாய் பந்து வீச முடியும்; இங்கு ஐயர்லாந்தின் கெவின் ஓபிரெயின் போன்ற யாரும் பொருட்படுத்தாத ஒரு மட்டையாளர் கூட ஐம்பது சொச்சம் பந்துகளில் சதம் அடித்து ஆட்டம் வென்று தர முடியும். தமிழ் சினிமா பார்வையாளனை போல் நாம் மிகுந்த விருப்பத்துடன் இந்த அசாத்தியங்களை நம்ப தலைப்படுகிறோம். சுற்றுலா பயணிகளுக்கு சொல்லப்படுவது போல் இந்தியா கிரிக்கெட்டில் கூட விநோதமான அதிசயங்களின் நாடு தான்.

Tuesday, March 8, 2011

“வேழாம்பல் குறிப்புகள்”: காலம் பிணைத்த கரங்கள்

 
சுகுமாரனின் “வேழாம்பல் குறிப்புகள் எனும் இணைய பத்திகளின் தொகுப்பு நீங்கள் எங்கிருந்து படிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அதற்கு ஏற்றாற் போல் திறந்து கொள்வது. இது பொதுவாக கவிதைத் தொகுப்புகளின் பண்பு என்று சொல்லத் தேவை இல்லை. சுகுமாரன் அடிப்படையில் ஒரு கவிஞர் என்பதும் குறிப்பிடத் தேவையில்லை.

Saturday, March 5, 2011

ராஜியின் அப்பா
ராஜி மூன்று முறை தும்மினாள். ஒவ்வொரு முறையும் அவள் கண்கள் சற்று வெளிப்பிதுங்கி பளபளத்தன. முதல் முறை தும்மும் போது “அப்பா நினைக்கிறார் என்றாள். இரண்டாம் முறை “அம்மா நினைக்கிறாள் என்றாள். மூன்றாம் முறை புன்னகை அரும்ப “அப்பா என்றாள். நான் அடுத்து நான்கு முறை தும்மினேன். நான்கு முறையும் “அம்மா நினைக்கிறாள் என்றேன். ராஜி தன் கையிலிருந்த புத்தகத்தால் என் உச்சந்தலையில் பட்டென்று அடித்தாள்.

Friday, March 4, 2011

அமைதி, பணிவு, அணிக்கலாச்சாரம்: யாருக்கானது உலக்கோப்பை?2011 கிரிக்கெட் உலக்கோப்பை யாருக்கானது? முன்னாள் வீரர்களும், பிரலங்களும், நிபுணர்களும், மீடியாவும் கூடவே சற்று குழம்பிப் போய் உள்ளார்கள். அனைத்துக் கைகளும் கோப்பையை சுற்றி பற்றி உள்ளன என்பதே அவர்களின் கண்டுபிடிப்பு. குறிப்பாய் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் விரல்கள் இறுக்கவே பற்றி உள்ளன. விநோதமாக, வழமையாகவும், ஐரோப்பிய நிபுணர்களும் வர்ணனையாளர்களும் வெள்ளை அணிகளை முன்னிறுத்துகிறார்கள்.