Monday, February 28, 2011

அமைதி - சார்லஸ் புக்காவஸ்கிஉணவகத்தின்
ஓர மேஜை முன்
அமர்ந்திருக்கிறார்கள்
ஒரு மத்திய வயது ஜோடி.
அவர் தங்கள் சாப்பாட்டை
முடித்தாகி விட்டது
ஒரு பீர் குடித்துக்
கொண்டிருக்கிறார்கள்.

Thursday, February 24, 2011

என் நண்பன் புத்தன் - புக்காவஸ்கிஎன் மேஜையில் இருக்கும் இந்த புத்தனை நான் கழுவியாக வேண்டும் ---
அவன் மீது முழுக்க தூசும் எண்ணெய் பசையும்
அதிகமும் அவனது நெஞ்சு மற்றும் வயிற்றில்; ஆஹ்
எத்தனையோ நெடிய இரவுகளை ஒன்றாய் பொறுத்திருக்கிறோம்;
சப்பையானவையையும் பயங்கரமானவையையும் நாங்கள் தாங்கியிருக்கிறோம்
பண்பற்ற காலங்களில்
சிரித்திருக்கிறோம் இப்போது
குறைந்தது நான் அவனுக்கு செய்ய வேண்டியது
ஈரத் துணியால் துடைப்பதாவது தான்;

Wednesday, February 23, 2011

பிச்சையிடல்கள் - புக்காவஸ்கிசில நேரங்களில்
இருபது நிமிடங்களில்
3 அல்லது 4 முறைகள்
என்னிடம் பிச்சை கேட்கப்படுவதுண்டு
நானும்
பத்தில்
ஒன்பது தடவைகள்
கொடுத்து விடுவேன்.

Tuesday, February 22, 2011

நீயா நானாவில் நான்

விஜய் டி.வி "நீயா நானா” நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறன்று விருந்தினனாக பங்கெடுத்தேன். நான் பேசின பகுதியை கீழே காணலாம்.


Saturday, February 19, 2011

ஓரு கனவு வேண்டும்
கனவுகள் என்னை
கடித்து பிராண்டியும் விளையாடியும் தொந்தரவு செய்கின்றன
துரத்துகின்றன.
வால் துடிக்க
சில பொழுது
கருமணி விழிகளால்
மெழுகாய் பேசுகின்றன

Wednesday, February 16, 2011

மூடுபனித் திரைக்கு அப்பால் என்ன உள்ளது?
நமது உலகம் கதைகளால் நிறைந்துள்ளது என்று சொன்னார் எம்.டி வாசுதேவன் நாயர். அந்த கதைகள் எவ்வளவு முக்கியமானவை, சுவாரஸ்யமானவை, கவனிக்கத்தக்கவை? எவை கதையாகின்றன? எம்.டியின் எழுத்து கலையில் இதற்கு விடை உள்ளது.

Saturday, February 12, 2011

மது நீரிழிவை தடுக்க உதவுமா? நீரிழிவு இருந்தால் குடிக்கலாமா?
நீரிழிவு தீவிரமான வாழ்வு முறை மாற்றங்களை கோருவது என்பது நமக்கு தெரியும். காப்பியில் சர்க்கரையை தவிர்க்கும் அளவுக்கு அது எளிதல்ல.

இடைப்பட்ட வெளியில்நாய்க்கு கதவின் பொருள்
புரிவது இல்லை
அது கதவுக்கும் வெளிக்கும் நடுவாக
அமர்ந்து வாலசைக்கிறது
தன் காதை அறைக்கு உள்ளாக
அறை ஜன்னலின் திசைக்கு
திருப்புகிறது

Sunday, February 6, 2011

நாங்கள் காதுகளை திருப்பிய போது


என்னைப் பார்த்து தான்

தலையணையில் தலை சாய்க்க

படுக்கை ஓரமாய் உருள

சதா காதுகளை பல கோணங்களிலாய் தூக்கி திருப்பி ஒட்டு கேட்க

பூனையிடம் மன்றாடும் ஆசிரியர்


நவீன பெண்களைப் போலவே நவீன கவிதைகளும் உள்ளடக்கத்தில் குழப்புவனவாகவும் ஏமாற்றம் தருபவையாகவும் இருப்பது நமக்கு பரிச்சயமானது தான். பத்திரிகைகளில் கவிதைப் பக்கங்களை எங்கே சுட்டு விடுமோ என்ற அச்சத்தில் புரட்ட நேரிடுவது கவிஞனுக்கும் வாசகனுக்கும் இன்று ஒருசேர ஆபத்து தான். இந்த நெருக்கடி வாசிப்பு நிலையில் சில கவிதைகள் வண்ணமடித்த கோழிக் குஞ்சுகளாக தெரிகின்றன. ஒன்று செல்மா ப்ரியதர்சனின் “பூனையிடம் மன்றாடும் ஆசிரியர். மிக அரிதான ஒரு நவீன நகைச்சுவை கவிதை. மொழியில் புதுமையும் கூர்மையும் உள்ளது. வகுப்பறையில் நடக்கும் ஒரு வன்முறையை நுட்பமாக அலட்டாமல் சொல்கிறது. பிப்ரவரி மாத தீராநதியில் 32வது பக்கத்தில் உள்ளது. வன்முறை நகைச்சுவை எனும் இரு எதிர் துருவங்களில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படிக்கலாம்

Friday, February 4, 2011

மரணத்தை மெல்ல பற்றி
காலை வெயிலுக்கு பின்னரும்
தங்கிடும் கொசுக்கள்
எண்ணிக்கையில் குறைவானவை
உருவத்தில் பெரியவை
போதையில் சலம்பும் நள்ளிரவு குடிகாரர்களை போல்
அவை உடலில் அமர்ந்திருக்க
காற்றில் மெல்ல நடுங்குகின்றன

Tuesday, February 1, 2011

127 Hours: “இந்த பாறை இங்கே எப்படி வந்தது?”
டேனி பாயிலின் புதிய படமான 127 Hours பாதியில் ஆரம்பித்து பாதியிலே முடிகிறது. ஒருநாள் கிரிக்கெட் ஆட்டமொன்றின் மிகச்சிறந்த மத்திய ஓவர் ஆட்டப் பகுதியில் சாத்தியப்படும் அளவுக்கு திகிலும் சாகசமும் சுவாரஸ்யமும் படிப்பினைகளும் கொண்டுள்ளது.