Monday, November 8, 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 25பலமுறை சொல்லப்பட்ட விவரணையின் படி ஜூலை 20 சுதந்திர நாளின் கொண்டாட்டங்களின் போதான வாணவெடிகள் கூரையில் விழுந்ததில் இந்த வீடு சாம்பலாகி போனது; பற்பல யுத்தங்களின் எந்த வருடத்து சுதந்திர நாள் என்பது யாருக்கும் தெரியாது. மிச்சமானது எல்லாம் சிமிண்டு தரைகளும் பாப்பலேலோ ஒரு அரசு அலுவராய் விளங்கிய பல்வேறு தறுவாய்களில் அவரது அலுவலகமாய் விளங்கிய, தெருவை எதிர்நோக்கிய கதவுடன் கூடிய இரண்டு அறைகளின் தொகுதி மட்டுமே.
அந்த வெப்பம் மாறாத அழிவுகளில் இருந்து குடும்பம் தனது அறுதியான புகலிடத்தை அமைத்தது. பூக்கள் வைத்த மாடமுடைய, குடும்ப மகளிர் அமர்ந்து சட்டங்களில் சித்திரப்பின்னல் இட்டு மாலையின் குளிர்மையில் உரையாடும் பொது அறை வழிப்பாதையில் வரிசையாக எட்டு அறைகள் கொண்ட ஒரு நீண்ட வீடு. அறைகள் ஒன்றோடொன்று வேறுபடாது எளிமை ஆனவை; ஆனால் அவற்றின் கணக்கற்ற விரங்கள் ஒவ்வொன்றிலும் என் வாழ்வின் அதிமுக்கிய கணம் ஒன்று உள்ளதை அறிய எனக்கு ஒரு ஒற்றை கண்ணோட்டம் போதுமானதாக இருந்தது,
முதல் அறை வரவேற்பறை மற்றும் என் தாத்தாவின் தனிப்பட்ட அலுவலகமாக விளங்கியது. அதில் ஒரு நழுவுமூடி மேசை, பஞ்சுத்திணித்த உறை கொண்ட சுழல்நாற்காலி, ஒரு மின்விசிறி மற்றும் ஒரு ஒற்றை பிரம்மாண்ட கந்தலான புத்தகம் ஸ்பானிஷ் மொழி அகராதி வைத்திருக்கும் ஒரு காலி புத்தக அலமாரியும் இருந்தன. அதற்கு வலது பக்கம் என் தாத்தா தனது சிந்த மணி நேரங்களை செலவழித்து திரும்பும் உடல்களும், சிறிய மரகத கண்களும் உடைய சிறு தங்க மீன்கள் உருவாக்கும் பட்டறை இருந்தது; இம்மீன்கள் அவருக்கும் உணவை விட அதிக ஆனந்தம் கொடுத்தது. சில குறிப்பிடத்தக்க முக்கியஸ்தர்கள் அங்கே வரவேற்கப்படனர், குறிப்பாய் அரசியல்வாதிகள், வேலையற்ற அரசு அதிகாரிகள் மற்றும் மூத்த போர் வீரர்கள். அவர்கள் இடையே பலதரப்பட்ட தருணங்களில் இரு வரலாற்று சிறப்புடைய விருந்தாளிகளும்: தளபதிகள் ராபேல் உரிபே மற்றும் பெஞ்சமின் ஹெரேரா; இவ்விருவரும் எங்கள் குடும்பத்தோடு மதிய உணவு அருந்தி உள்ளனர். ஆனால் என் பாட்டி உரிபே உரிபே பற்றி தன் வாழ்நாளின் மிச்சமெல்லாம் நினைவு கூர்ந்தது மேஜையில் அவரது மிதத்தன்மையை பற்றியே” “அவர் ஒரு பறவையைப் போல உணவருந்தினார்”.
எங்களது கரீபியன் கலாச்சாரம் காரணமாக அலுவலகம் மற்றும் பட்டறை இருந்த பகுதி பெண்களுக்கு விலக்கப்பட்டதாக இருந்தது; நகரத்து உணவு மற்றும் மது விடுதிகள் பெண்களுக்கு சட்டப்படி விலக்கப்பட்டிருந்ததை போன்றே இருந்தும் காலப்போக்கில் அது ஒரு மருத்துவமனை அறையாக மாற்றப்பட்டது; அங்கு அத்தை பெட்ரா காலமானாள்; பாப்பலேலோவின் சகோதரி வெனேபிரீடா மார்க்வெஸ் தனது நீண்ட நோய்மையின் கடைசி மாதங்களை கழித்தாள். என் பால்யத்தில் அந்த வீட்டினுள் கடந்து சென்றிருந்த பல வீட்டுப் பெண்கள் மற்றும் தற்காலிக பெண்களின் காற்றுப் புகாத சுவர்கபுரி இவ்வாறு ஆரம்பம் கொண்டது. இரு உலகங்களின் வசதிகளை அனுபவித்த ஒரே ஆண் நான் மட்டுமே. பெண்கள் தையலிட அமரும் மாடமும், தினமும் மதிய ரயிலில் வரும் எதிர்பாக்கப்பட்ட அல்லது எதிர்பாராத பதினாறு விருந்தாளிகளுக்கான மேஜையும் உடைய உணவறை பொது அறை வழிப்பாதையின் விரிவான ஒரு பகுதி மட்டுமே. அங்கிருந்து அம்மா உடைந்த பேகோனியே பூந்தொட்டிகள், அழுகின அறுவடை வயல், எறும்புகளால் அரிக்கப்பட்டு மீதமான மல்லிகைத் தண்டு ஆகியன பற்றி சிந்தனையில் ஆழ்ந்து பெருமூச்சு விட்டாள்.
மல்லிகைப் பூக்களின் சூடான நறுமணம் தாங்க முடியாது எங்களுக்கு சில நேரங்களில் மூச்சுத் திணறும்”. அவள் வண்ண மயமான ஆகாயத்தை நோக்கியவாறு சொன்னாள்; ஆழ்மனதில் இருந்து ஏக்கப் பெருமூச்சு விட்டாள். “ஆனால் அப்போதில் இருந்து நான் ரொம்ப ஏங்கியது அந்த மூன்று மணி இடியோசைக்காகத் தான்”

1 comment:

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்