Tuesday, November 30, 2010

பாகிஸ்தானில் இருந்து கிரிக்கெட் நிபுணர்கள்


ராகுல் பட்டாச்சாரியாவின் Pundits from Pakistan ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறந்த கிரிக்கெட் புத்தகங்களில் ஒன்று. காரணம்: கிரிக்கெட் தான் ஆதாரம் என்றாலும் நூல் கிரிக்கெட்டை தாண்டி கலாச்சாரம், வரலாறு, மீடியா தந்திரங்கள் எனும் பல்வேறு விஷயங்களை கிரிக்கெட் லென்ஸ் வழி சொல்லுகிறது.

Saturday, November 27, 2010

தேர்வு குளறுபடிக்கு யார் பலிகடா?


 கிரிக்கெட்டில் ஒரு வீரரை தேர்வு செய்ய அடிப்படை என்ன?
திறமை. இத்திறமையை உள்ளுணர்வு சார்ந்து தேர்வாளர் கண்டறியலாம். அல்லது ஆட்ட ரிக்கார்டை வைத்து முடிவு செய்யலாம். மற்றொன்று ஆட்டவகைமைக்கான பொருத்தம்.

Friday, November 26, 2010

தென்னாப்பிரிக்க தொடர்: சாத்தியங்கள் மற்றும் ஊகங்கள்

சமகாலம் கிரிக்கெட்டில் பந்துவீச்சின் இலையுதிர் பருவம் எனலாம். தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்டு எந்த அணியுமே ஒரு ஆட்டத்துக்கு முன்னால் தன் மட்டையாட்ட வலிமையைத் தான் பெரிதும் நம்புகிறது; எந்த அணியும் டாஸ் வென்று மிக அரிதாகவே பந்து வீச விரும்புகிறது. பயணப்படும் அணிகள் எதிர்பார்ப்பது தம் மட்டையாளர்கள் ஓட்டங்களைக் குவிக்க வேண்டும் என்பதே. 500க்கு மேற்பட்ட ஓட்டங்கள் ஏற்படுத்தும் நெருக்கடி பந்து வீச்சுக்கு இல்லாத ரெண்டு கோரப் பற்களை தந்து விடுகிறது.

Wednesday, November 24, 2010

அப்பாவின் புலிகள்


அப்பாவின் கட்டில் வெற்றாய் கிடந்தது. மெத்தை இல்லை, தலையணை இல்லை, அவரது சிவப்பு துண்டை யாரோ விரித்திருந்தார்கள். அப்பா ஓய்வு பெற்ற நாளில் அலுவலக பிரிவுபசார விழாவின் போது வழங்கியது. அப்பா அன்று மிக மகிழ்ச்சியாக இருந்தார்; வழக்கத்துக்கு மிகுதியாக மது அருந்தியிருந்தார். அக்காவின் அறைக் கட்டிலில் அமர்ந்தபடி அவளை அணைத்தபடி பேசிக் கொண்டே இருந்தார்.

Monday, November 22, 2010

நீட்சே அறிமுக குறிப்புகள் 6

வாக்னர்: குரு எனும் பாலம் (தொடர்ச்சி)

நீட்சே அம்மாவுடன்
வாக்னருக்கும் நீட்சேவுக்குமான ஆவேசமான நட்பை பேசும் போது முன்னவரின் ஒரு பிரத்தெயேக குனநலனை முதன்மையாக குறிப்பிட வேண்டும். பிறரை தனக்கேற்றபடி பயன்படுத்தும், நடந்து கொள்ளத் தூண்டும் மற்றும் எந்நிலையிலும் தன்னை மட்டுமே முன்னிறுத்தும் விழைவு. இத்தனைக்கும் பின்னுள்ள வாக்னரின் ஈகோயிசம்.

Sunday, November 21, 2010

சொந்தம் கொண்டாடும் தேரைஆன் ஆட்வுட்
இறுதியாய்
லில்லியின் வெண்குழலில் இருந்து
பகல் வெளிக்கசியும்
Ann Atwood
Finally
from the lily's white funnel
day trickles out

Thursday, November 18, 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 26இது என் மனதை இளக்கியது; ஏனெனில் எங்களை மதிய தூக்கத்தில் இருந்து எழுப்பிய கற்களின் வசைமாரி போன்ற அந்த ஒற்றை இடிமுழக்கம் இப்போதும் நினைவில் உள்ளது; ஆனால் அது மூன்று மணிக்கு மட்டுமே நிகழ்ந்தது என்பதை நான் ஒரு போதும் அறிந்திருக்க இல்லை.

Tuesday, November 16, 2010

நீட்சே: அறிமுகக் குறிப்புகள் 5

 வாக்னர்: குரு எனும் பாலம்
வாக்னர்

நீட்சேவை பாதித்த ஆளுமைகளாக ஷோப்பன்ஹெர், வாக்னர், புக்ஹார்ட், எப்.ஏ லேங், டார்வின் ஆகியோர் கருதப்படுகின்றனர். இந்த பாதிப்பாளர்கள் பற்றின பரிச்சயம் நீட்சேவை நெருங்க எந்தளவு முக்கியம்?

Monday, November 15, 2010

நட்பின் சமநிலை

  

நண்பனை அதிகம் புகழக் கூடாது என்கிறார் சாக்ரடெஸ். நெருங்கிய நண்பனை எந்நேரமும் எதிரியாக நேரிட தயாராக இருக்க வேண்டும் என்கிறார் நீட்சே. இரண்டும் உஷாராக இருக்கும்படியான அறிவுறுத்தல்கள் அல்ல. இரண்டும் நடுவில் உள்ள சமன்நிலை தான் நட்பு பாராட்டல் என்று படுகிறது

Sunday, November 14, 2010

கிரிக்கெட் லைவ்: இணையமா டீ.வியா?டி.வியில் ஒருநாள் முழுக்க கிரிக்கெட் மாட்ச் பார்க்கையில் நம் மீது திணிக்கப்படுகின்ற விளம்பரங்கள் எத்தனை? ஒரு ஓவருக்கு 2-இல் இருந்து 3 விளம்பரங்கள் என்ற கணக்கில் 90 ஓவருக்கு கிட்டத்தட்ட 270.

Friday, November 12, 2010

நாவலின் தகவல்கள் எத்தகையவை?


நாவலின் சமையற்குறிப்பு எனும் பதிவில் ஜெயமோகன் நாவலில் சித்தரிப்பும், தகவல்களை அடுக்கிக் கொண்டே போவதன் முக்கியத்துவத்தை பற்றி சொல்கிறார். உதாரணமாக ஒரு விஷ்ணுபுர பாணியிலான சித்தரிப்பை விளக்குகிறார். எப்போதுமே ஒரு செயலை சுருக்கி சொல்ல நாவலில் முயலக் கூடாது என்கிறார். அவன் கதவைத் திறந்தான் என்று எழுதுவது நாவல் அல்ல, கதவின் நிறம், நீள் அகலம், அறையின் வெளிச்சம் அல்லது இருள், சுற்றிலும் ஊறி வரும் ஒலிகள் என்று பல்வேறு தகவல்களை தந்து எழுதுவதே உத்தமம் என்கிறார். தனது கருத்தை அவர் இப்படி பொதுமைப்படுத்தலாமா என்ற விவாதத்தை பின்னால் வைத்துக் கொள்வோம். நான் இதை எழுத முற்பட்டது வேறொரு குழப்பத்தை தீர்க்க.

Tuesday, November 9, 2010

தமிழில் ஏன் இத்தனை கவிதைகள் எழுதப்படுகின்றன?


 விசிட்டிங் கார்டுகளுக்கு அடுத்தபடியாய் தமிழில் அவசரமாய் பிரசுரம் ஆவது கவிதைத் தொகுப்புகள் என்று நமக்குத் தெரியும். தமிழ்க்கவிதையின் நோய்மை இது என்று தீர்ப்பளித்து பேனாமுனை உடைப்பதும் எளிது. கவிதைக்கான் ஆதார நுட்பமோ சொல்வதற்கு ஏதாவது சங்கதியோ இல்லாதவர்கள் இப்படி மானாவரியாய் எழுதி அழகான அட்டை வடிவமைப்புடன் வழவழ தாள்களில் முன்னணி பதிப்பக முத்திரையுடன் புத்தகமாக்குவதன் உத்தேசம் என்னவாக இருக்கும்? இன்று ஒரு பதிப்பகம் சென்று 2010இல் அவர்கள் வெளியிட்ட எட்டு தொகுப்புகளை புரட்டி படித்தபின் ஒரு குமட்டல் போல் இந்த கேள்வி மீளமீள தோன்றிக் கொண்டிருந்தது. ஏன் கட்டுரைகள் அல்லது கதைத் தொகுப்புகளை விட கவிதைகள் அதிகம் தொகுப்புகளாகின்றன?

சிங்கம் கங்காரு மற்றும் வகார் யூனிஸ்: உருமாற்றங்களின் கதை
இலங்கை அணி ஆதரவாளர்கள் தம்மை சிங்கம் என்று சுயபெருமை கொள்ளும் போது நமக்கு வேடிக்கையாக இருந்ததுண்டு. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் சென்றுள்ள இலங்கையினர் ஆடிய ஆட்டம் அசோகமித்திரனின் புலிக்கலைஞன் வாசகர்களுக்கு ஒரு புன்னகையை வரவழைத்திருக்கும்.

Monday, November 8, 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 25பலமுறை சொல்லப்பட்ட விவரணையின் படி ஜூலை 20 சுதந்திர நாளின் கொண்டாட்டங்களின் போதான வாணவெடிகள் கூரையில் விழுந்ததில் இந்த வீடு சாம்பலாகி போனது; பற்பல யுத்தங்களின் எந்த வருடத்து சுதந்திர நாள் என்பது யாருக்கும் தெரியாது. மிச்சமானது எல்லாம் சிமிண்டு தரைகளும் பாப்பலேலோ ஒரு அரசு அலுவராய் விளங்கிய பல்வேறு தறுவாய்களில் அவரது அலுவலகமாய் விளங்கிய, தெருவை எதிர்நோக்கிய கதவுடன் கூடிய இரண்டு அறைகளின் தொகுதி மட்டுமே.

Wednesday, November 3, 2010

நீட்சே அறிமுகக் குறிப்புகள் – 4ஆக்கிலஸின் கேடயம்: ஒரு மாணவனும் இரு அதிமனிதர்களும்

பொபோர்டொ பள்ளியில் பாடத்திட்டம் மரபானது; அதனாலே சற்று வினோதமானது. இப்பள்ளி கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை விட லத்தீன், கிரேக்கம் போன்ற மரபான பாடங்களிலே அதிக கவனம் செலுத்தியது. நீட்சேயின் பிற்காலத்திய சிந்தனையில் கிரேக்க மரபு ஒரு தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. அவரது லட்சிய உலகம் கிரேக்க காலத்தில் நங்கூரம் இட்டிருந்தது. அவரது தத்துவ உலகின் அடித்தளம் இப்பள்ளி அனுபவத்தில் இருந்து அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மாபெரும் சிந்தனையாளர்களுக்கு இவ்வாறு இளமையில் கிடைக்கும் அறிவுத்துறை பரிச்சயங்கள் திசைதிருப்பியாக அமைகின்றன.

Tuesday, November 2, 2010

ரேயின் நாயக்: யாரின் கைப்பாவைகள் நாம்?1966இல் சத்யஜித் ரேயின் சுயமான கதையில் உருவான ரெண்டாவது படமான நாயக் அவரது ஒரே ரயில்பயணப் படைப்பும் கூட. படம் ஒரு ரயில் பயணத்தில் நடக்கிறது. அரிந்தம் எனும் ஒரு பிரபல சினிமா நாயகன் தில்லிக்கு விருது வாங்க விமான பயணச் சீட்டு கிடைக்காமல் ரயிலில் போகிறான். அவனது வெளியாகப் போகும் படம் தோல்வியடையப் போவது கிட்டத்தட்ட உறுதி. கடும் மன நெருக்கடியில் இருக்கும் அரிந்தம் அதிதி எனும் பத்திரிகையாளப் பெண் ஒருவளை ரயிலில் சந்தித்து உரையாடி தன்னை சிறுக சிறுக அறிந்து தெளிவடைவதே கதையின் மைய ஓட்டம். ரேவின் நாயகன் அக்காலத்திய வங்காளத்தின் ஒரு நிஜமான சினிமா நாயகன் உத்தம் குமார். அதிதியாக ஷர்மிளா டாகூர்.

Monday, November 1, 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 24

 கதவு சற்று திறக்க மிகத் தயக்கமான முறையில் நிழல்களில் இருந்து ஒரு பெண் கேட்டாள்: “என்ன வேண்டும்?
ஒருவேளை பிரக்ஞையற்ற, அதிகாரத்துடன் அம்மா பதிலுரைத்தாள்: “ நான் லூயிசா மார்க்வெஸ்
பிறகு தெருக்கதவு முழுக்கவே திறந்தது, அதோடு இரங்கல் ஆடையில் ஒரு வெளிறிய, எலும்புகள் புடைத்த பெண் தோன்றி ஆவி உலகத்தில் இருந்து எங்களைப் பார்த்தாள்.