Saturday, October 16, 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 23“எல்லாவற்றிலும் மோசம் என்ன என்றால்”, அவள் சொன்னாள், “ நாங்கள் இவனுக்கு உதவ செய்த தியாகங்களுக்கு எல்லாம் பிறகு இவன் சட்டப்படிப்பை நிறுத்தி விட்டான்”.
ஆனால் ஒருவரை ஆட்கொள்ளும் பணிக்கான அற்புதச் சான்று இது என்று மருத்துவர் கருதினார்: அன்போடு போட்டியிட முடியக் கூடிய ஒரே சக்தி. மற்றும் எல்லாவற்றையும் விட, அனைத்திலும் மிகப்புதிரான, ஒருவர் திரும்ப எதையும் எதிர்பாராமல் தன் முழுவாழ்வையும் அர்ப்பணம் செய்ய வேண்டிய கலைப்பணி அது. “ஒருவர் பிறந்த அந்த கணத்தில் இருந்தே உள்ளுக்குள் சுமக்கும் ஒன்று அது; அதை எதிர்ப்பது ஒருவரது ஆரோக்கியத்துக்கு மிகவும் கெடு”, அவர் சொன்னார். ஒரு திருத்த முடியாத பிரீமேசனது மந்திரப்புன்னகையுடன் இறுதி ஒப்பனை பூச்சுகள் செய்தார், “ஒரு பாதிரியின் பணி இது போலத்தான் இருக்க வேண்டும்”. என்னால் ஒருபோதும் தெளிவுபடுத்த முடிந்திராத ஒன்றை அவர் விளக்கிய பாணி கண்டு அசந்து போனேன். அம்மாவும் இப்படி உணர்ந்திருக்க வேண்டும்; னெனில் அவர் என்னை மெதுவான மௌனத்துடன் நோக்கினாள்; தன் விதியிடம் சரணனைந்தாள்.
உன் அப்பாவிடம் இதை எல்லாம் சொல்ல சிறந்த வழி என்ன?”,அவள் என்னைக் கேட்டாள்.
“இப்போது நாம் கேட்டபடியே தான்”, நான் சொன்னேன்.
“இல்லை இது எந்த பயனும் தராது”, அவள் சொன்னாள். மேலும் யோசித்த பிறகு முடிவாய் சொன்னாள்: “ஆனால் நீ கவலைப்படாதே, அவரிடம் சொல்வதற்கு ஒரு நல்ல வழியை கண்டுபிடிக்கிறேன்
அவள் அப்படி செய்தாளா என்று எனக்குத் தெரியாது, ஆனால் அதுவே அவ்விவாதத்தின் முடிவாய் அமைந்தது. இரண்டு கண்ணாடித் துளிகள் போல் இரு மணிச்சத்தங்களால் கடிகாரம் மணி சொன்னது; அம்மா அதிர்ந்தாள்: “கடவுளே”, அவள் சொன்னாள், “எதற்கு வந்தோம் என்பதையே மறந்து விட்டேன்”, அவள் எழுந்து நின்றாள்.
“நாங்கள் போக வேண்டும்”.
தெருவுக்கு குறுக்கே உள்ள வீட்டின் மீதான என் முதல் பார்வைக்கு என் ஞாபகத்துடன் அவ்வளவாய் தொடர்பில்லை; என் நினைவு ஏக்கத்துடன் ஏதுமே இல்லை. ஆண்டுகளாய் ஐயமற்ற நினைவுச் சின்னங்களாய் விளங்கின இரு காவல் வாதாம் மரங்கள் வேரோடு வெட்டப்பட்டிருந்தன. சுட்டெரிக்கும் சூரியனுக்கு கீழ் எஞ்சியதெல்லாம் ஒரு பாதி ஓட்டுக் கூரையுடன் 30 மீட்டர்களுக்கு மேலாக வராந்தா, ஒரு பொம்மை வீட்டை நினைவூட்டியடி, மறுபாதி கரடுமுரடான மரப்பலகைளால் அமைக்கப்படிருந்தது. மூடப்பட்ட கதவில் அம்மா சில பொதுவான தட்டல்கள் தட்டினாள்; பிறகு சில சத்தமான தட்டல்கள்; பிறகு ஜன்னல் வழி கேட்டாள்: “வீட்டில் யாரும் இல்லையா?

2 comments:

S.Sudharshan said...

நல்ல மொழி நடை ..வாழ்த்துக்கள் ..

இன்று சற்று வெட்கம் கொள்வோம் .. இதுவும் ஆயுத பூஜை தான்

http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html

Tech Shankar said...

Thanks dear buddy!

Welcome to : amazingonly.com

by

TS