Tuesday, April 27, 2010

மத்தியான காகம்



நியோன் விளக்குகளின் மேலே
கவியும் நீலவானப் புகை
புகை கக்கி அசையும் பேருந்துகள்

பேருந்து வந்து விட்டதாய்
கூட்டத்தில் இல்லாமலாகும் காதலி

வேறெதுவும் கேட்பதற்கில்லை
மத்தியான காகம்
இப்போதும் கரைவதைத் தவிர

6 comments:

இளமுருகன் said...

//கூட்டத்தில் இல்லாமலாகும் காதலி//

நன்றாக இருக்கிறது

இளமுருகன்
நைஜீரியா

ராம்ஜி_யாஹூ said...

ARUMAI, good poem. thanks for sharing

ஆர்.அபிலாஷ் said...

நன்றி இளமுருகன் மற்றும் ராம்ஜி!

ஆர்.அபிலாஷ் said...

நன்றி இளமுருகன் மற்றும் ராம்ஜி!

Sai Ram said...

மதியம் என்பது ஒரு வெறுமை. வெக்கையை உள்வாங்கி வெள்ளை குருட்டில் ஆழ்த்தும் உறக்கம். காகங்கள் பாவம்.

காமிராவில் பார்க்கிற உணர்வு ஏற்படுகிறது. நன்றி!

ஆர்.அபிலாஷ் said...

நன்றி சாய்ராம்