ஜெயமோகனின் கடுஞ்சாயா


வாழ்வில் முதன்முறையாக என் குருநாதரின் அறிவுரையை பின்பற்றி, அவர் தன் தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி ... கடுஞ்சாயா (black tea) செய்து குடித்தபடி இதோ எழுதுகிறேன். ஆஹா, இந்த ஜன்னல் வழி வெளிச்சாரலை கவனித்தபடி கறுப்பு டீயை குடிக்கும் சுகம் அருமை. நாம் வழக்கமாக குடிக்கும் டீயை விடவும் இதற்கு ஒரு அலாதியான சுவை, மணம், குணம் எல்லாம் உள்ளது. சில நொடிகள் இளமை திரும்பி விட்டாற் போல் ஒரு உணர்வு வேறு.

குருநாதர் இந்திய டீயின் வரலாறு, பண்பாடு குறித்தெல்லாம் விரிவாக எழுதி உள்ளார். வெறுமனே இந்த அதிஅற்புத தேநீரின் செய்குறிப்பு மட்டும் தெரிந்து கொள்ள விருப்பம் கொண்டவர்கள் அவர் தளத்துக்கு சென்று தொலைந்து போக வேண்டாம். கீழே சுருக்கமாக தருகிறேன்.

1. தண்ணீரை கொதிக்க வையுங்கள்
2. குமிழ்கள் தோன்றும் முன்னரே இறக்கி விடுங்கள்
3. கால் ஸ்பூன் தேயிலை சேர்த்து கலக்குங்கள்.
4. சரியாக நாற்பது நொடிகளில் எடுத்து வடிகட்டவும்.
5. சர்க்கரை சேர்க்கவும்.

இது கீழைத்தேய தேனீராக இருக்க வேண்டும். ஆங்கில டீ முற்றிலும் மாறாக தயாரிக்கப் படுகிறது. நிமிடக்கணக்கில் கொதிக்க வைக்க்கிறார்கள். 41 நொடிகள் கொதிக்க வைத்தால் அது விஷம் என்று சீனர்கள் கருதுவதாகவும் மிருகங்களுக்கு கூட அதை கொடுக்க மாட்டார்கள் என்றும் ஜெ குறிப்பிடுகிறார். சரிதான், குரு ஒரு சந்தேகம்.

சீனர்கள் மிருகங்களுக்கு டீ கொடுப்பார்களா என்ன?

Comments

கென்., said…
சேட்டனின் சாயா :) கீழைத்தேய சாயாவா உங்கள் அங்கதம் நல்லாயிருக்கு